ராமானுஜ இதிகாசம்
ராமானுஜ இதிகாசம் - ஜெயஸ்ரீ ஸôரநாதன்; பக்.336; ரூ.380; சுவாசம் பதிப்பகம், சென்னை- 127; ✆ 8148066645.

ராமானுஜ இதிகாசம் - ஜெயஸ்ரீ ஸாரநாதன்; பக்.336; ரூ.380; சுவாசம் பதிப்பகம், சென்னை- 127; ✆ 8148066645.
நிகரில்லா வைணவ ஆசார்யரான ராமானுஜரின் வாழ்க்கையின் சில முக்கிய நிகழ்வுகள் குறித்து நவீன வரலாற்று ஆசிரியர்கள் சிலர் எழுப்பும் ஐயங்களுக்கு பொதுவெளியில் உள்ள வலுவான சரித்திரச் சான்றுகளின் அடிப்படையிலேயே மிகத் தெளிவாக, அழுத்தமாக பதில் தரும் விதத்தில் அமைந்துள்ளது இந்த நூல்.
ராமானுஜர் வாழ்ந்த காலம், அவர் சோழ நாட்டிலிருந்து வெளியேறி இன்றைய கர்நாடகத்தின் மேல்கோட்டையில் இருந்ததையும் உற்சவ விக்கிரகத்தை மீட்க அவர் தில்லி சென்றார் என்பதையும் ராமானுஜர் சரித்திரத்தைக் கூறும் பாரம்பரிய நூல்களில்தான் காண முடிகிறது. அதற்கு பிற சான்றுகள் இல்லை என்று வாதிடுவோருக்கு விளக்கம் அளிக்கும் வகையில், ஆதாரங்களை அடுக்குகிறார் ஜெயஸ்ரீ ஸாரநாதன்.
வைணவத்தை எதிர்த்த சமணர்கள், பெளத்தர்களின் தொல்லை ராமானுஜர் காலத்திலும் இருந்தது என்றும் இந்தச் சமயப் பிரிவுவாதிகள் பல சோதனைகளை ஏற்படுத்த முயன்றதைத் தொடர்ந்து அவர் சோழ நாட்டிலிருந்து வெளியேறினார் என்பதையும் தக்க ஆதாரங்களுடன் முன்வைக்கிறார் நூலாசிரியர். வைணவ மரபு வரலாறுகள், கல்வெட்டுகள், பிற சரித்திர ஆசிரியர்களின் மேற்கோள்களின் பக்கபலத்தில் தன் வாதத்தை முன்வைக்கிறார்.
கடந்த பல நூற்றாண்டுகளில் நிலவிய இந்திய சமூக நிலையைப் பொருத்தமாக அறிந்து கொள்ள உதவியாக சுவாரசியமான பின்னிணைப்புகள் தரப்பட்டுள்ளன.
தென்னகத்தில் வைணவத்தை உறுதியாக நிலைநிறுத்தியவரும் சமூகப் புரட்சி நாயகனுமான ராமானுஜரைப் பற்றிய முக்கியமான நூல் இது. விறுவிறுப்புடன் எழுதப்பட்ட இந்த வரலாற்று நூல் அனைவரும் வாசிக்க உகந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...