திருக்குறளில் தமிழர் மருத்துவம் - மரு. ஜெ.ஜெயவெங்கடேஷ்; பக்.158; ரூ.190; கோகிலா சித்த மருத்துவமனை, ஆராய்ச்சி மையம், மதுரை-11; ✆ 98421 67567.
திருக்குறளில் மருத்துவம் தொடர்பான 133 குறள்களைத் தேர்வு செய்து, அதன் விளக்கத்தை எளிய தமிழில் பாமரர்களுக்கும் புரியும்படியாக விளக்கியுள்ளார் நூலாசிரியர்.
மருந்து அதிகாரத்தில் தமிழர் மருத்துவம், பிற அதிகாரங்களில் தமிழர் மருத்துவம், அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப் பால் என மூன்றிலும் சொல்லப்
பட்டுள்ள தமிழர் மருத்துவக் குறிப்புகள் என திருக்குறளும், அதற்கான விளக்கவுரைகளும் மருத்துவத் துறைக்கான வழிகாட்டுதல் எனலாம்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவத் துறை குறித்து திருவள்ளுவரின் தெளிவான பார்வை, இன்றைய நவீன காலத்துக்கும் பொருந்தும் வகையில்தான் அமைந்துள்ளது என்பதை நூலை படிக்கும்போதே உணர முடிகிறது.
நம்மில் ஏற்பட்டுள்ள உடல் நோய்களுக்கும், உள்நோய்களுக்கும் தமிழர் மருத்துவ முறையாலும், தன்னாலேயேயும் தீர்வு காண முடியும் என்ற உந்துதலை இந்த நூல் ஏற்படுத்துகிறது.
ஆய்வு நூலைத் தொகுக்க உதவிய நூல்கள், நூலாசிரியரின் பிற நூல்கள் என பிற்சேர்க்கையில் இணைத்திருப்பது சிறப்பு.
தமிழர்களின் ஆரோக்கிய வாழ்வியல் முறைகளை அறிந்துகொள்ள விரும்புவோர் வாசிக்க வேண்டிய நூல் என்பதோடு, அன்றாட வாழ்வியலுக்குத் தொடர்புடைய விஷயங்கள் இருப்பதால் நம் இல்லங்களின் அலமாரிகளில் அலங்கரிக்க வேண்டிய நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனித்துப்போட்டியிடும் தைரியம் நாம் தமிழருக்குத்தான் உண்டு: சீமான்

கவுண்டம்பாளையம் தொகுதியில் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்!

அவசர மருத்துவ உதவியாளா் தினம் அனுசரிப்பு

தமிழ்நாட்டின் மருத்துவத் துறையில் ஒரு காலிப் பணியிடம்கூட இல்லை
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை