தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்தி
/

DIN

மணிமேகலை தெளிவுரை - கு.கணேசன்; பக். 416; ரூ. 405; மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 104; ✆ 93805 30884.

தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தை அடுத்துத் தோன்றியதே 'மணிமேகலை'. கோவலன், கண்ணகி, மாதவி வரலாறு கூறுவது சிலப்பதிகாரம். மாதவி - கோவலன் மகள் மணிமேகலையின் வரலாறு கூறுவது 'மணிமேகலை'. இவ்விரண்டும் ஒரே காப்பியத்தின் இரு பகுதிகள்போல, கதைத் தொடர்ச்சியும் பிற அமைப்புகளும் உள்ளன.

'அழகும், உயிரோவியமாய்த் திகழ்ந்த மணிமேகலை துறவறம் பூண்டு, பசித்தவர்க்கு உணவு வழங்குவதே பேரறம் எனக் கொண்டு வாழ்ந்ததே' இந்தக் காப்பியச் செய்தியாகும்.

அவ்வகையில், புத்த தருமத்தை, மனித குலத்தின் அறக்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தமிழில் தோன்றியதே, இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான, சீத்தலைச் சாத்தனார் இயற்றிய 'மணிமேகலை'. இதற்கு நிகர் உலகில் வேறு இல்லை எனலாம்.

அறக்கோட்பாட்டை வலியுறுத்துவதுதான் உண்மை இலக்கியங்களின் ஆன்மா. உலகின் எந்த மொழியில் படைக்கப்பட்ட சிறப்பான இலக்கியமாக இருந்தாலும் இதைக் கடந்து செல்வது இயலாது.

முப்பது காதைகளை உடைய மணிமேகலைக்கு ஏற்கெனவே உரைகள் எழுதப்பட்டிருக்கின்றன என்றாலும், தெளிந்த நீரோடைபோல சிறப்பான தெளிவுரையையும், எளிய தமிழிலும் விளக்கம் தருகிறது இந்த நூல். ஒவ்வொரு பாட்டுக்கும் உட்தலைப்புகள் வழங்கியிருப்பதில் நூலாசிரியரின் புதுமையான முயற்சி தெரிகிறது. நூலின் இறுதியில் அருஞ்சொற்பொருள்கள் இடம்பெற்றுள்ளது பயனுள்ளதாக உள்ளது. வரலாறு, தமிழ் ஆர்வலர்கள் வாசிக்கத் தவறவிடக் கூடாத நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.