தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்தி
/

DIN

சோதனையும் சாதனையும் - உதயை. மு.வீரையன்; பக். 160; ரூ.160; பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-14; ✆044-28482441.

தினமணியில் நாட்டின் பல பிரச்னைகள் குறித்து நடுநிலையோடு விருப்பு, வெறுப்பின்றி நூலாசிரியர் எழுதிய 24 கட்டுரைகளின் தொகுப்பு நூல் வடிவம் எடுத்துள்ளது.

முதல் கட்டுரையான 'உயிர்களைக் காப்பாற்ற ஓர் எச்சரிக்கை'யில் பருவநிலை மாற்றத்தால் உலகம் எதிர்கொள்ளப் போகும் பிரச்னைகள், அதற்கு ஐ.நா. சபை விடுத்துள்ள எச்சரிக்கை, அதை உலக நாடுகள் பின்பற்ற வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமார் வரதன் உள்ளிட்டோரின் ஆய்வுத்தகவல்களையும் அவர் மேற்கோள்காட்டி உள்ளார். அதாவது, திடீர் மழையால் ஏற்படும் வெள்ளப் பெருக்கை நீர்நிலைகளில் சேகரிக்க முடியாது; நிலத்தடி நீர் ஆதாரமும் உயராது என்ற கருத்து சிந்திக்க வைக்கிறது.

'ஆறுகளைக் காப்பதே அறிவுடமை' என்ற தலைப்பிலான கட்டுரையும் முக்கிய ஆறுகளில் ஆலைக் கழிவுகளும், சாயக் கழிவுகளும் கலப்பதினால் ஏற்படும் பாதிப்புகளையும், மணல் கொள்ளையால் ஏற்பட்டுள்ள சவால்களையும் சித்தரிக்கிறது.

'முதுமை வரமா? சாபமா?' என்ற கட்டுரை முதியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 'அன்றாடம் உழைத்து உழைத்து ஓய்ந்து போனவர்களைக் காப்பாற்றும் கடமை மக்கள் நல அரசுக்கு கிடையாதா?' என்ற கேள்வி நியாயமானதாகப் படுகிறது.

'நிலத்தை அழித்து மின்சாரம் தேவையா?', 'கல்வியும் வேலைவாய்ப்பும்', 'கண்ணீரில் மிதக்கும் காவிரி விவசாயிகள்' உள்ளிட்ட கட்டுரைகள் சமூகச் சிந்தனை இழையோடும்படி உள்ளன. படித்து பயன்பெற வேண்டிய நல்லதொரு நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.