திருக்குறள் காமத்துப்பால் வாழ்வியல்

திருக்குறள் காமத்துப்பால் வாழ்வியல்
SWAMINATHAN
Updated on
2 min read

திருக்குறள் காமத்துப்பால் வாழ்வியல் - கோவிந்தம்மாள் சோதி நடராசன்; பக். 356; ரூ. 300; விக்னா வெஞ்சர்ஸ், சென்னை - 92; ✆ 98847 10065.

ஈரடியால் படைக்கப்பட்டதும் முப்பாலாய் தொகுக்கப்பட்டதும் நான்கு திசைகளையும் வென்று 'உலகப் பொதுமறை' எனப் போற்றப்படுவதுமானது திருக்குறள். எப்படி வாழ்வதென்ற அறத்தையும், வாழ்க்கைக்கான பொருளையும், வாழ்வின்இன்பத்தையும் இந்த நூல் உணர்த்துகிறது. குறளின் முதலிரண்டு பால்கள் குறித்து இதுவரை ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் முப்பாலின் மூன்றாம் பாலான காமத்துப்பால் குறித்து பேசுவதும் எழுதுவதும் மிக, மிகக் குறைவாகவே உள்ளது.

கற்றறிந்தவர்கள்கூட காமத்துப்பால் குறித்து எழுதத் தயங்குவதற்கு 'காமம்' என்ற சொல் பற்றிய தவறான புரிதலே காரணம். எனினும், ஆசை, விருப்பம் எனப் பொருள்படும் காமம் இல்லையேல் உலகும் இல்லை; உயிர்களும் இல்லை.

காமத்துப்பாலைத் தீண்டத் தகாததாக எண்ணி ஒதுக்குவதாலோ என்னவோ இல்லறம் குறித்த புரிதல்கள் குறைந்து, குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்குகள் நிறைந்து வருகின்றன.

அந்தக் குறையைப் போக்கும் வண்ணம் காமத்துப்பால் காட்டும் தூய காதலை, வாழ்வியலைப் பற்றி தெளிவுறவுப் பேசுகிறது இந்த நூல்.

காமத்துப்பாலின் 25 அதிகாரங்களுக்கும் சங்க கால, பிற்கால, நவீன இலக்கியங்களிலிருந்து மட்டுமன்றி, திரையிசைப் பாடல்களிலிருந்தும், அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்தும் எடுத்துக்காட்டுகளுடன் எளிய நடையில், ஒரு நாவலை வாசிப்பதுபோன்ற உணர்வு ஏற்படும் வகையில் நூலைத் தந்துள்ளார் நூலாசிரியர்.

ஒவ்வோர் அதிகாரத்துக்கும் மற்ற அதிகாரங்களிலிருந்து ஏற்ற குறள்களைக் குறிப்பிட்டு விளக்கம் தந்திருப்பது அருமை. தமிழ், குறள் ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல திருமணப் பரிசாகவும் கொடுப்பதற்கு ஏற்ற நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com