கற்றதும் பெற்றதும் மற்றவர்க்கே! - நெல்லை சு.முத்து; பக்.192; ரூ.200; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; ✆ 93805 30884.
திருநெல்வேலியில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் நூலாசிரியர். அவர் 38 ஆண்டுகளாக விண்வெளித் துறையில் பணியாற்றியவர், ஐந்நூறுக்கும் மேற்பட்ட அரங்குகளில் உரைநிகழ்த்தியவர் என்று பல்வேறு சிறப்புகளை உடையவர். இவர் பல்வேறு துயரங்களுக்கு மத்தியில் தனது வாழ்நாள் முழுவதும் கடின உழைப்பால் படிப்பில் முதல் வகுப்பு மாணவராகத் திகழ்ந்து, உயர்ந்தவர்.
இவர் தனது இளம்பருவம் முதல் தற்போது வரை பங்கேற்று வென்ற படைப்புகள், கடந்து வந்த பாதைகளைத் தொகுத்து இந்த நூலை வெளியிட்டுள்ளார்.
நெல்லை தந்த விதை, மதநல்லிணக்கமும் கல்வியும், அறிவியலும் தமிழும், மாணவர் பருவத்தில் வாத்தியாராக, விண்வெளியில் சிறிய கால்வைப்பு, அண்டை மாநிலத் தமிழர்க்கு, அறிவியல் கவிஞராக, இல்லற வாழ்வில், திண்ணிய நெஞ்சம் வேண்டும், கலாமுடன் ஒத்த கருத்துடன் அறிவியல் மீது நம்பிக்கை, என்றென்றும் அறிவியல் தமிழ், வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழ், பெற்ற விருதுகளும் வகித்த பொறுப்புகளும், அறக்கட்டளை நிறுவனர் எனும் பதினாறு தலைப்புகளில் இந்த நூலில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தலைப்புகளைப் படிக்கும்போதே அவற்றில் உள்ள விஷயங்கள் என்ன இருக்கும் என்பதை ஊகித்துவிட முடியும்.
இவ்வாறாக, இவருடைய வாழ்க்கைப் பயணம் இளையதலைமுறையினருக்குப் பாடமாய், அவர்களுக்கு வழிகாட்டியாய், உந்துதலாய் இருக்க வேண்டும் என்ற முனைப்பில் நூலாசிரியர் எழுதியுள்ளதை அறியலாம்.
சுய வரலாற்று நூலாக இல்லாமல், தமிழ், அறிவியல், வரலாறு, வாழ்க்கை அனுபவம், குடும்ப உறவுகளோடு நல்லுறவு, நட்புகளோடு இணக்கம், வாழ்க்கை வாழ்வதன் நோக்கம் .. என்று பல்வேறு தகவல்களை எடுத்துரைக்கும் நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கோபி கலை அறிவியல் கல்லூரியில் கல்வெட்டுத் தமிழ் பயிலரங்கம்

சா்.சி.வி.ராமனின் ‘அறிவியல் விளைவுகள்’ நூல் வெளியீடு!
தமிழ் இலக்கியங்களில் சூழலியல் மேலாண்மை சிந்தனைகள்

9 ஆவது பொருநை- நெல்லை புத்தகத் திருவிழா தொடக்கம் - பிப். 22 வரை கண்டு ரசிக்கலாம்
வீடியோக்கள்

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...