ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (திரைக்கதை) - ஸ்டிவன் ஸைலியன், தாமஸ் கெனியலி (தமிழில் - வேங்கட கிருஷ்ணன்); பக்.264; ரூ.270; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை - 17; ✆ 044- 24332682, 24338712.
இரண்டாம் உலகப் போரின்போது உச்சம் பெற்றிருந்த யூத அழிப்பை மையப்படுத்தி ஆஸ்திரேலிய எழுத்தாளர் தாமஸ் கெனியலி 'ஷிண்ட்லர்ஸ் ஆர்க்' என்னும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட நூலை எழுதினார். அதைத் தழுவி ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய அமெரிக்கத் திரைப்படம் 'ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்'-இன் முழு திரைக்கதையை தமிழில் பதிவு செய்த முதல் நூல் என்ற பெருமையை இந்த நூல் பெறுகிறது.
போலந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஸ்கர் ஷிண்ட்லர், ஹிட்லரின் நாஜிக் கட்சியில் முக்கிய பிரமுகர். இவரிடம் ஆயிரக்கணக்கில் யூதத் தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். சட்டத்துக்குப் புறம்பாக பணம் சேர்ப்பதில் குறியாக இருக்கும் ஷிண்ட்லர், 1,200 யூதத் தொழிலாளர்களை நாஜி படைகளின் இன அழிப்பிலிருந்து காப்பாற்றும் பொருட்டு மிகவும் தந்திரமாகச் செயல்பட்டு அதில் வெற்றியும் பெறுகிறார். இதற்காக அவர் சம்பாதித்த மொத்த செல்வத்தையும் செலவழித்தார்.
'ஓர் உயிரைக் காப்பாற்றுபவர், உலகம் முழுவதையும் காப்பாற்றுகிறார்' என்ற யூதப் பழமொழியை இந்நூல் நினைவூட்டுகிறது. முழு படத்தையும் திரையில் பார்த்த அனுபவத்தை காட்சிக்கு காட்சி இந்நூலை வாசிக்கும்போது ஏற்படுவதே இப்புத்தகத்தின் சிறப்பு.
ஓர் உண்மை நிகழ்வை திரைப்படமாக்கும்போது அதன் திரைக்கதை மிகவும் கவனமாக எழுதப்பட வேண்டும். அப்பணியை ஸ்டிவன் ûஸலியன் மிகவும் சிறப்பாகச் செய்திருக்கிறார். திரைத் துறையினருக்கு இதுவொரு சிறந்த நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வரப்பெற்றோம் (02.03.2026)

வரப்பெற்றோம் (23-02-2026)
உதயபானு கான்மலர்

வரப்பெற்றோம் (16-02-2026)
வீடியோக்கள்

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...