தாகூர் (வங்கத்து மீகாமனின் வாழ்க்கைச் சித்திரம்)- வீ.பா.கணேசன்; பக். 336; ரூ.400; கிழக்கு பதிப்பகம், சென்னை-14, ✆ 044- 4200 9603.
தேசிய கீதத்தை இயற்றியவர் ரவீந்திரநாத் தாகூர் என்றே அறிந்த நிலையில், சுதந்திரப் போராட்டத்திலும், புதிய இந்தியா உருவாக்கத்திலும் அவருடைய பங்களிப்பு எந்தளவுக்கு இருந்துள்ளது என நூலாசிரியர் இந்த நூலில் எடுத்துரைத்துள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா எவ்வாறு விடுபடுவது, புதிய இந்தியா எப்படி இருக்க வேண்டும், வழிநடத்துவது எவ்வாறு, வேற்றுமைகளில் ஒற்றுமையை எவ்வாறு காண்பது .. என்று பலவகைகளில் தாகூர் சிந்தித்துள்ளார் என்பதையும், அதனால்தான் அவரை 'இந்தியாவின் மனசாட்சி' என்று மகாத்மா காந்தியும், ஜவாஹர்லால் நேருவும் கூறினார்கள் என இந்நூலில் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
தாகூரின் முன்னோர்களின் வரலாறு, ரவீந்திரநாத் இளம்பருவம் முதல் இறுதிக் காலம் வரையில் 42 தலைப்புகளில் எளிய தமிழில் நூல் எழுதப்பட்டுள்ளது.
'கவிஞர், பாடலாசிரியர், சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர், இசை வல்லுநர், நாடக ஆசிரியர், நடிகர், ஓவியர், கல்வியாளர், தத்துவஞானி, மனித நேயர், சர்வதேசவாதி, நாட்டுப் பற்றாளர், தீர்க்கதரிசி, வழிகாட்டி..' என அனைத்து வகையான செயல்பாடுகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றியவர் தாகூர் என்று நூலைப் படிக்கப் படிக்கத் தெளிவாகிறது.
விரிவான தரவுகளோடும், மேற்கோள்களோடும் தாகூர் குறித்து வெளிவந்த நூல்களில் இதுவும் சேர்கிறது. தேசப்பற்றாளர்கள் வாசிக்கத் தவறவிடக் கூடாத நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வரப்பெற்றோம் (02.03.2026)

வரப்பெற்றோம் (23-02-2026)
உதயபானு கான்மலர்

வரப்பெற்றோம் (16-02-2026)
வீடியோக்கள்

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...