பெங்களூரில் நாளைமுதல் உணவகங்கள் மூடல்!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

விருதுநகர் முதல் தூத்துக்குடி வரை...

News image
Updated On :17 ஜூன் 2024, 1:32 pm

DIN

விருதுநகர் முதல் தூத்துக்குடி வரை... - பாரதிவாணர் சிவா; பக்.270; ரூ.200; பாரதி பல்கலைப் பேரவை, புதுச்சேரி - 605 010; ✆99765 96563.

'புதுவை பாரதி' எனும் சிற்றிதழை 39 ஆண்டுகளாக நடத்திவரும் நூலாசிரியர் எழுதிய 99 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

ஏற்கெனவே தங்கங்களே நாளைய தலைவர்களே! (34 கட்டுரைகள்), கனவு காணுங்கள் 2003, வருங்காலம் வாழட்டும் 2008 (இரண்டும் தலா 27 கட்டுரைகள்), விடியல் வேண்டும் 2014 (59 கட்டுரைகள்) என்று நான்கு நூல்களை வெளியிட்டுள்ள இவர், தனது மணி விழா ஆண்டில் முப்பதாவது நூலாக இந்த நூலை வெளிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலக விஷயங்கள் வரை ஏராளமான தகவல்கள் நூலில் நிரம்பியிருக்கின்றன. தமிழின் சிறப்பு, தன்னம்பிக்கை, அரசியல், அறிவியல், கலை, இலக்கியம், வரலாறு, திரைத்துறை, கல்வித் துறை, சுற்றுலாத் தலங்கள், தொழில், சொந்த வாழ்க்கை, விளையாட்டு, முக்கிய தலைவர்கள் என்று 102 கட்டுரைகள் பல்சுவை கொண்டதாகவே இருக்கின்றன. பல நூல்களைப் படித்து கற்றுணர வேண்டியவற்றை ஒற்றை நூலில் படித்து முடிக்கும் திருப்தி, நூலைப் படித்து முடித்தவுடன் தோன்றுகிறது.

ஒவ்வொருவரும் அன்றாடம் சந்திக்கும் வாழ்வியல் பிரச்னைகள், தீர்வுகள் இடம்பெற்றுள்ளது சிறப்பு. கட்டுரைகளின் தொடக்கத்தில், செய்திகளின் விஷயங்களை மேற்கோள் காட்டி அதை விரிவாக அலசி, தீர்வை நூலாசிரியர் விவரித்திருப்பது அவருடைய தொலைநோக்கு சிந்தனையைக் காட்டுகிறது.

இந்த நூலை வாசிப்போருக்கு நூலாசிரியரின் இதர நூல்களைப் படிக்க பட்டியலை இணைத்திருப்பது, போட்டித் தேர்வர்களுக்கு பயனுள்ளதாகவே இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.