தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

DIN

இதனால் சகலமான பேர்களுக்கும்... - கவிஞர் பூவை செங்குட்டுவன்; பக்.64; ரூ.80; காந்திமதி பதிப்பகம், சென்னை-18; ✆ 94449 96016.

தான் கண்டதையும் கேட்டதையும் கற்றதையும், தனது மனதில் தோன்றியதையும் சின்னஞ்சிறு கட்டுரைகளாகத் தொகுத்து நூலாக்கியுள்ளார் நூலாசிரியர்.

அப்துல் கலாம், கலைவாணர், சரத் சந்திரசட்டர்ஜி, பெரியார் ஈ.வெ.ரா., காமராஜர், அண்ணா, ஜவாஹர்லால் நேரு, கருணாநிதி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குன்றக்குடி அடிகளார், டி.என்.ராஜரத்தினம் பிள்ளை போன்றோர் வாழ்வில் நடைபெற்ற சுவாரசியமான நிகழ்வுகள் வியப்பூட்டுகின்றன. ஆவிகள், பேய் பிசாசுகள், குடுகுடுப்பைக்காரர்களின் பேச்சைக் கேட்டு பதறியவர் போன்ற மூட நம்பிக்கைகளை விட்டொழிக்க வேண்டும் என்பதற்கான உதாரணங்கள் அருமை. ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டவர் ஹிட்லர், ஜோதிடம் பார்த்த நிகழ்வின் முடிவு அபாரம்.

திருக்குறள் தேசிய நூலாகவில்லையே என்று திருமுருக கிருபானந்தவாரியாரின் வருத்தம், பெண்கள் தாலி அணியும் பண்பாட்டில் தமிழர் திருமண முறைகள் போன்ற பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் செய்திகளைப் படிக்கும்போது, உலக அரங்கில் தமிழர்களின் வாழ்க்கை முறை மெய்சிலிர்க்க வைக்கிறது.

அரசியல், ஆன்மிகம், இலக்கியம், ஈகை குணம் கொண்ட தலைவர்கள், உழைப்பின் மகத்துவம், ஊர்வம்பு பேசுவோரின் நிலை, என்றும் மக்கள் மனதில் நிலைத்திருப்போர்.. என்று பலதரப்பட்ட நிகழ்வுகளைத் தொகுத்து, ஒற்றை நூலில் நூற்றுக்கும் மேற்பட்ட தகவல்களை அள்ளித் தந்துள்ள நூலாசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது.

பன்முக நூல்களைப் படிக்க விரும்புவோருக்கு இது உகந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.