தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

அயோத்திதாச பண்டிதரும் சமகால பெளத்த ஆளுமைகளும்

News image
Updated On :11 மார்ச் 2024, 1:15 pm

DIN

அயோத்திதாச பண்டிதரும் சமகால பெளத்த ஆளுமைகளும் - பெ. விஜயகுமார்; பக்.220; ரூ. 260; பாபா சாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம், சென்னை - 21; ✆ 98847 44460

அயோத்திதாச பண்டிதர் பற்றியும் அவருடைய சமகால பெளத்த ஆளுமைகளைப் பற்றியுமான 12 கட்டுரைகளின் தொகுப்பு. இவர்கள் தனிநபர்களாக அல்லாமல் இயக்கமாகச் செயல்

பட்டவர்கள் என்றாலும், இவர்களைப் பற்றி இன்றைய சமுதாயத்துக்கு அறியக் கிடைப்பது மிகவும் சொற்பமே.

பெளத்தர்களையே பறையர்கள் எனத் தாழ்த்தியிருக்கிறார்கள் என்ற மையக் கருத்தைக் கொண்ட மாரிக்குப்பம் பிரசங்கத்தை அறிமுகப்படுத்தி, ஆதிவார மாலைப் பிரசங்கங்கள் உள்பட அயோத்திதாசரின் குறிப்பிட்ட சொற்பொழிவுகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

லட்சுமி நரசு, சிங்காரவேலர், பூஞ்சோலை முத்துவீர நாவலர் போன்ற பெளத்த ஆளுமைகளுடன் ம. மாசிலாமணியார் பற்றிய கட்டுரை சுருக்கமாக முடிந்துவிடுகிறது.

'தமிழன்' இதழில் பெண் விடுதலை, பெண் கல்வியை முன்னெடுத்த கோ. ஸ்வப்பநேஸ்வரி அம்பாளின் ஏராளமான கட்டுரைகள் தமிழனில் இருப்பதைச் சுட்டிக்காட்டும் ஆசிரியர், மேற்கோள்களுடன் அவருடைய கருத்துகளையும் செயற்பாடுகளையும் விளக்கியுள்ளார்.

திருப்பத்தூர் ஏ.பி. பெரியசாமி புலவரின் வாழ்க்கையைச் சுருக்கமாகக் கூறுவதுடன் பெளத்தத்துக்கான அவருடைய பங்களிப்பும் விவரிக்கப்படுகிறது. பெரியசாமிக்கு அயோத்தி

தாசர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா, திரு.வி.க., பெரியார் ஈ.வெ.ரா. போன்றோர் எழுதிய கடிதங்கள் அருமை தெரியாமல் அழியவிடப்பட்டதாக அவருடைய மகன் கமலநாதன் வருந்தியிருக்கிறார்.

ஜி. அப்பாதுரையார், கோலார் தங்கவயல் தமிழாசிரியர் இ.நா. ஐயாக்கண்ணு, சித்தார்த்தா புத்தக சாலை நிறுவனர் பி.எம். ராஜரத்தினம் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொருவரைப் பற்றிய கட்டுரையுமே தனி நூல்களாக உருப்பெறத்தக்க விஷயங்களைக் கொண்டவை, நூல்களாக்கப்பட வேண்டியவையும்கூட.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.