ஆரியர்: ஆதி வரலாறும் பண்பாடும் - வி. சிவசாமி; பக். 102; ரூ. 150; அடையாளம், புத்தாநத்தம் (திருச்சி மாவட்டம்) - 621310; ✆ 94447 72686.
1976- ஆம் ஆண்டில் இலங்கை யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட நூலின் மேம்படுத்தப்பட்ட இந்திய மறுபதிப்பு இந்த நூல்.
ஏற்கெனவே 'திராவிடர் ஆதிவரலாறும் பண்பாடும்' என்ற நூலை எழுதியவர் இதன் ஆசிரியர் சிவசாமி.
கி.மு. 2000 தொடக்கம் இந்தியாவை நோக்கி அலைஅலையாக ஆரியர்கள் வந்ததாகத் தொல்லியல், இலக்கியம், மொழியியல் சான்றுகள், தொன்மை வரலாறு கொண்டு நிறுவும் ஆசிரியர், வேத காலகட்டங்களையும் இலக்கியங்களைக் கொண்டும் ஆராய்ந்து சுட்டுகிறார்.
ஆரியர்களின் ஆதி இருப்பிடம் பற்றி விரிவாக விவாதிப்பதுடன், ரிக் வேத ஆரியரும் ஈரானிய ஆரியரும் தங்களை ஆரிய, ஐர்ய எனப் பொதுப் பெயரால் அழைத்துக்கொண்டனர் என்கிறார்.
ஈரானிலிருந்து இந்தியாவுக்குப் படிப்படியாகவே புலம் பெயர்ந்தனர் என்ற சுனிதி குமார் சாட்டர்ஜியின் கருத்தைச் சுட்டிக்காட்டுவதுடன், ரிக் வேதமே இந்தியா வந்த ஆரியரின் ஆதி ஏடு, முதல் நூல் என்கிறார் சிவசாமி.
ரிக் வேத காலத்தில் ஆப்கானிஸ்தானம், வட இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் ஆரியர்கள் வாழ்ந்ததாகக் குறிப்பிட்டு, தெற்கு நோக்கிய அவர்களின் குடியேற்றத்துடன் கங்கைச் சமவெளியின் முக்கியத்துவமும் கூறப்படுகிறது.
வேதகால அரசியல் நிலை, வேதகாலச் சமய தத்துவ நிலை, வேதகாலச் சமூக நிலை, வேதகாலப் பொருளாதார நிலை ஆகிய இயல்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. ஏராளமான தகவல்
களைத் தருகின்றன. ஆரியர்கள் தொடர்பாக இதுவரை வெளிவந்த எண்ணற்ற நூல்களைக் கற்ற ஆசிரியர், அவற்றின் மையக் கருத்தை உள்வாங்கி, தன் எண்ணப் பிழிவைத் தனிநூலாகத் தந்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தொழில் செ(ய்)ய விரும்பு

பழமொழி நானூற்றில் கருத்து வெளிப்பாடு

வரப்பெற்றோம் (02.03.2026)
கல்லில் உறைந்த வரலாறு கிருஷ்ணகிரி மாவட்ட தொன்மையும் வரலாறும்
வீடியோக்கள்

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...