பக்தியும் பார்த்தசாரதியும் - முனைவர் க.ர.லதா; பக்.240; ரூ.230; ஜோதி பதிப்பகம், சென்னை-37; ✆ 99401 90616.
எழுத்தாளர் தீபம் நா. பார்த்தசாரதியின் நூல்களை ஆய்வு செய்து வரும் அவருடைய உறவினரும் பேராசிரியருமான நூலாசிரியர் எழுதிய நூல் இது. பார்த்தசாரதியின் நூல்களை ஆய்வு செய்வதோடு, அவருடைய நூல்களை மீண்டும் மீண்டும் பதிப்பிக்கச் செய்து எழுத்துலகில் பெரிய பங்களிப்பை ஆற்றி வருகிறார்.
அழகர் மலை, அழகர் கோயில் வரலாறும் வழிபாடுகளும், திருமாலையும் ஸ்ரீரங்க கத்யமும், தொண்டரடிப் பொடியாழ்வாரின் பக்திநெறி, திருமூலர் காட்டும் அரசன், திருமூலரின் அட்டாங்க யோகம் உணர்த்தும் செய்திகள், திருவாசகத்தில் ஐந்தெழுத்து மந்திரம், மாணிக்கவாசகரின் சைவ நெறி, சித்தர்களின் உடலியல் சிந்தனைகள், சட்டை முனிவரின் வாழ்வும் வாக்கும், பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பலில் புலனடக்கம், மனுமுறை கண்ட வாசகம் பட்டியலில் பசிப்பணி, குமரேச சதகம் காட்டும் அரசன் போன்ற கட்டுரைகள் சைவம், வைணவம் என்று ஒருசேர ஆன்மிக விருந்தளிக்கிறது இந்த நூல்.
நா.பா.வின் வாழ்வும் எழுத்தும், பாரதியைப் போற்றுதல், அவருடைய சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் போன்றவை குறித்து நூலில் அலசப்பட்டுள்ளன. பார்த்தசாரதியின் 38 நூல்களின் விவரங்களைத் தொகுத்து, 25 கட்டுரைகளாக நூலாசிரியர் தொகுத்துள்ளார். இந்த நூலைப் படித்து முடிக்கும்போது, மூல நூல்களை வாசிக்க வேண்டும் என்ற உந்துதல் மனதில் ஏற்படுகிறது.
இன்றைய இளையதலைமுறையினருக்கு பார்த்தசாரதியை பற்றி அறிய உதவும் நல்லதொரு நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வரப்பெற்றோம் (02.03.2026)

வரப்பெற்றோம் (23-02-2026)

வரப்பெற்றோம் (16-02-2026)

வரப்பெற்றோம் (03-02-2026)
வீடியோக்கள்

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...