கற்பித்தலும் கற்றலும்

கற்பித்தலும் கற்றலும், முனைவர் ஏ.திருநாவுக்கரசு, பக்.292, ரூ.350, யூடூ ரைட் பதிப்பகம், எண் 1200, முதல் தளம், 62-ஆவது தெரு, கொரட்டூர், சென்னை- 600080.
'சத்தம் போட்டு படிக்கக் கூடாது, தேர்வு பயம் இல்லையென்றால் மாணவர்கள் படிக்க மாட்டார்கள், அனைவருக்கும் நூற்றுக்கு 100 மதிப்பெண் வாங்க முடியாது, தனிப் பயிற்சி இல்லாமல் பிள்ளைகள் தேறுவது கடினம்...' போன்ற நம்பிக்கையின் அடிப்படையில் கூறப்படும் பல்வேறு கருத்துகள் குறித்து இந்த நூல் அலசுகிறது. இதை ஆராய்ந்து கல்வியின் முழுப் பலனையும் கற்றவர்கள் பெறுவதற்குத் தேவையான தகவல்களை தன் அனுபவங்களின் அடிப்படையில் இந்த நூலில் எடுத்துக் கூறியிருக்கிறார் நூலாசிரியர்.
'கற்பித்தல் என்பது வெற்றுப் பாத்திரத்தை நிரப்பும் செயலல்ல. அது ஒரு விளக்கை ஏற்றும் செயலாகும்' என்கிறார் அரிஸ்டாட்டில். இருப்பினும், 'அறியாதவர்கள் போன்று இயந்திரத்தனமாகக் கற்பித்தலில் ஈடுபடுகிறார்கள். கற்பித்தல் கற்றலில் முடிய வேண்டும். கற்பித்தலை விட கற்றலே முக்கியம். கற்றலில் முடியாத கற்பித்தல் முற்றிலும் வீண்' என்ற கருத்து அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், கற்றலை உறுதி செய்யும் கற்பித்தல் வகைகளையும், முறைகளையும் விவாதிப்பதோடு, அதன் பல்வேறு கூறுகளான தீர்வுக் கற்பித்தல், திட்டப்பணி, தனிப்பயிற்சி ஆகியவற்றின் அறிவார்ந்த வடிவங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், ஆசிரியர்களின் பணிச்சுமை குறித்தும் நூல் பேசுகிறது.
மாறி வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் புதிய திறன்களை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டுமெனில் முதலில் ஆசிரியர் அதன் நுட்பங்களை உள்வாங்கி, அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். நுண்ணுணர்வு இல்லாத ஆசிரியர்கள் ஆரோக்கியமான கல்விச் சூழலை பாதித்து விடுவார்கள் என்பது உறுதி. அனைவருக்கும் ஒரு தவிர்க்க முடியாத ஆவணமாக இந்நூல் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...