தமிழகத்தின் தலைசிறந்த ஆளுமைகள்

தமிழகத்தின் தலைசிறந்த ஆளுமைகள் - என்.ஆர்.மணி; பக்.256; அன்பிதழ்; என்.ஆர்.மணி வெளியீடு, சென்னை-80; ✆ 94440 42336.
டி.வி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றும் நூலாசிரியர் தமிழ் மீது பற்றுகொண்டவர். இயற்கையை நேசிக்கும் இவர் பலரை ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பழம் தரும் மரக்கன்றுகளை நட்டவர். தேச விடுதலைக்காகப் பாடுபட்ட 108 பேரின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து நூலாக்கியுள்ளார். இருநூறு ஆண்டுகள் ஆங்கிலேயர்களிடம் நாடு அடிமைப்பட்ட நேரத்தில், தேச விடுதலைக்காகப் பாடுபட்டது விடுதலைப் போராட்ட வீரர்கள் மட்டுமல்ல; அவர்களுடைய குடும்பத்தாரும் தியாக மனப்பான்மையோடு இருந்துள்ளனர் என்பதை நூலாசிரியர் நினைவூட்டுகிறார். தியாகிகளை நினைவுகூரும் தேசம், அவர்களின் உறவினர்களை நினைவுகூராதது ஏன் என்ற கேள்வியும் படிக்கும்போது எழத்தான் தோன்றுகிறது.
மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களுக்கு முன்பே அந்நியரை எதிர்த்துப் போராடிய தமிழ் மன்னர்கள், படைத்தளபதிகள் குறித்தும், அரசியல் ரீதியான போராட்டங்கள், ஐ.என்.ஏ. படைப்பிரிவில் முக்கியப் பங்காற்றியோர், தலைசிறந்த ஆளுமைகள் குறித்தும் படிக்கப் படிக்க தேசத்தின் மீதான பற்றுதல் நமக்கு தூண்டும் வகையில், தியாகிகளின் வீரமும், போராட்டமும் இருந்துள்ளதை உணர முடிகிறது. தேச விடுதலைக்காக, ஆயிரக்கணக்கானோர் போராடிய தியாகத்தை இந்த நூல் நினைவுகூருவதோடு, அவர்களது குடும்பத்தையும் முன்னிறுத்துகிறது. பிற்சேர்க்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட தியாகிகளின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்.
இயந்திரமயமான சூழலில் இளைய தலைமுறையினர் அவசியம் வாசித்து, தேசத்தின் மீதும் மக்களுக்கு உதவ வேண்டிய மனப்பான்மையை ஊக்குவிக்கவும் இந்த நூல் ஒரு வழிகாட்டி எனலாம். தமிழர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...