தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பெண் எனும் பகடைக்காய்

அதிகாரப் பரவலை அரசு முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தும் நல்லதொரு நூல்.

News image
Updated On :23 ஏப்ரல் 2025, 1:49 pm

DIN

பெண் எனும் பகடைக்காய்- பா.ஜீவசுந்தரி; பக்.150; ரூ.200; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை-83; ✆ 96003 98660.

பெண்ணிய ஆய்வாளர், ஊடகவியலாளர் என பன்முகத் தன்மை கொண்ட நூலாசிரியரால் நாளிதழில் எழுதப்பட்டு வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூலாகி வரவேற்பைப் பெற்று, தற்போது பத்தாண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நூல் வடிவம் பெறுகிறது.

'சமூகத்தில் நடப்பவை அனைத்தும் பெரும்பாலும் ஆண் சிந்தனையிலேயே பார்க்கப்படுகின்றன. ஒவ்வொரு நிகழ்விலும் பெண் பார்வை இல்லை' என வேதனைப்படும் நூலாசிரியர், "சட்டங்கள் தீட்டுவது முதல் திட்டங்கள் அமைப்பது வரை ஆண் பார்வை அமையுமானால், அதுகுறித்து கேள்வி எழுப்பவும் பெண் மையப் பார்வை அவசியம்' என்கிறார். இதை மையப்படுத்தியே இந்நூலில் உள்ள 30 கட்டுரைகளும் இருக்கின்றன.

ஆட்சி அதிகாரத்தில் 50 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு, அரசியல் கட்சிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லாத நிலை, பெண்களுக்கான உரிமைகள்அற்ற நிலை, பெண் உழைப்பு சுரண்டப்பட்டும் சலுகைகள் இல்லாத சூழல், குழந்தைகள் பராமரிப்பில் ஆண்களுக்கும் பங்கு வேண்டும் என இந்நூல் முழுக்க பெண்களின் பிரச்னைகளே மையப்படுத்தப்பட்டிருக்கின்றன.

மூன்றாம் பாலினத்தவர்களும் மனிதர்களே என்று திருநங்கைகளையும் சக தோழிகளாக நினைத்து அவர்களுக்கு உரிமைகள் தேவை என்று வலியுறுத்தும் நூலாசிரியரின் எண்ணம் போற்றுதலுக்குரியது. பெண்களுக்கான அதிகாரம் பெயரளவிலேயே இருக்கிறது என்றும் அதிகாரப் பரவலை அரசு முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தும் நல்லதொரு நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.