

மருந்துகளைப் புரிந்துகொள்வோம்-காமராஜ் மணி; பக்.118; ரூ.160; சுவாசம் பதிப்பகம், சென்னை-600 127, ✆ 81480 66645.
மாதந்தோறும் மளிகைப் பொருள்கள் வாங்குவதைப் போலவே மருந்துகளையும் வாங்கும் நிலை அனைத்து வீடுகளிலும் உருவாகிவிட்டது. அப்படி நமது வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட மருந்துகளின் தோற்றத்தையும், அதன் பரிணாமத்தையும் தெளிவுற எடுத்துரைக்கும் நூல் இது.
காய்ச்சல் வந்தால் கண்மூடித்தனமாக உட்கொள்ளும் பாராசிட்டமால் மாத்திரைகளுக்குப் பின்னால் அரை நூற்றாண்டு கால கதை ஒளிந்திருக்கிறது என்பதை சுவாரஸ்யமாக விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். காய்ச்சலைக் குறைக்க எந்தெந்த மருந்துகள் முதலில் பயன்படுத்தப்பட்டன, அவற்றை அடிப்படையாகக் கொண்டு எப்படி புதிய மாத்திரைகள் உருவெடுத்தன என்பது கதைபோல விவரிக்கப்பட்டுள்ளது.
மூலக் கூறுகள், அறிவியல் பெயர்கள் என வாசிக்கும்போதே சோர்வடைய வைக்கும் மருத்துவச் சொல்லாடல்கள் அனைத்தையும் அசுரப் பாய்ச்சலான எழுத்து நடையில் எளிமையாக்கியிருப்பது சிறப்பு.
மாத்திரைகளின் வகைகளில் தொடங்கி உயிர் காக்கும் மருந்துகள் கண்டறியப்பட்ட வரலாறு, அதன் வளர்ச்சி, சமகால மருத்துவ மேம்பாடு என அறியப்படாத பல தகவல்கள் பக்கந்தோறும் வியாபித்திருக்கின்றன. மற்றொருபுறம் மருந்துகளின் எதிர்விளைவுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
அலோபதி மருத்துவத்தோடு நில்லாமல் இந்திய மருத்துவ முறையில் வழங்கப்படும் மருந்துகள் மற்றும் அதன் பண்புகள் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இந்திய மருந்தியல் கல்வியின் தந்தை, இன்சுலின் வரலாறு போன்ற கட்டுரைகள் சுவாரஸ்யம்.
அஞ்சறைப் பெட்டியை தூக்கியெறிந்து விட்டு அறைக்கு ஒரு மருந்துப் பெட்டி வைத்திருக்கும் நம் அனைவருக்குமான மருத்துவக் கையேடு இந்நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.