மெளனம் கலைத்த சினிமா- பா. ராமமூர்த்தி, பக். 178; ரூ. 180; வளர்பிறை பதிப்பகம், சென்னை-600053 ✆ 98849 67484.
உலகத் திரைப்படங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று திரைத் துறை இலக்கியம் சார்ந்த 24 பிரபலங்களிடம் கேட்ட கேள்விக்கு அவர்கள் கூறிய விளக்கங்களின் தொகுப்புதான் இந்த நூல். உலக திரைப்படங்கள் மட்டுமல்லாது இந்திய திரைப்படங்கள், தமிழ் திரைப்படங்கள் குறித்தும் அவர்கள் தங்களது கருத்துகளை கூறியுள்ளனர்.
வியக்க வைக்கும், சிந்திக்கத் தூண்டும் தங்களது மேலான பார்வையை திரையுலகு குறித்து அந்தப் பிரபலங்கள் பதிவு செய்துள்ளளனர்.இந்த நூலில் உலகமெங்கும் இருக்கக்கூடிய புகழ்பெற்ற இயக்குநர்கள், படைப்பாளிகள் போன்றவர்களின் கருத்தை அவர்களின் பெயரோடு தனித்தனியாக பதிவு செய்துள்ளது இந்தப் புத்தகத்துக்கு கூடுதல் கலை வடிவம் தந்துள்ளது.
ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம் எப்படி இருக்க வேண்டும்; கலைப் படைப்பு எப்படி இருக்க வேண்டும்; ஒரு படைப்பாளனின் தேவை என்ன? அவனது சுதந்திரத்தின் எல்லை எது? போன்ற கேள்விகளுக்கான விடை இந்தப் புத்தகத்தில் உள்ளது.
பேசும் படங்கள் வந்ததும் சார்லி சாப்ளின் சொன்ன கருத்து 'திரைப்படங்கள் இனி செத்துவிடும்' என்பதுதான்'. இதுபோன்ற ஆழமான கருத்துகள் ஏராளம் நூலில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.