மரம் ஏறும் மீன்
இந்நூலை வாசித்தவர்கள் எந்தக் குழந்தையையும் பார்த்து, 'சரியான மக்காக இருக்கிறாயே?; என்று இனிமேல் கூற மாட்டார்கள்.

மரம் ஏறும் மீன் (கற்றல் குறைபாடு மற்றும் ஏ.டி.எச்.டி)- ராதா பாலசந்தர்; பக்.184 ; ரூ.200; சென்டர் ஃபார் எஜுகேஷன் அண்ட் கம்யூனிகேஷன் & நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எஜுகேஷன் அண்ட் கம்யூனிகேஷன், சென்னை-14; ✆ 044-2835 3136.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளில் சிலர் பாடப் புத்தகங்களைப் படிப்பதிலோ, தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதிலோ திறமையானவர்களாக இருக்கமாட்டார்கள். ஓவியம் வரைதல், பாடுதல், பேசுதல் போன்றவற்றில் திறமையானவர்களாக இருப்பார்கள். ஏன் அவர்கள் அப்படி இருக்கிறார்கள் என்பதை பல பெற்றோர்கள் தெரிந்து கொள்வதில்லை. ஆசிரியர்களும் கூட. அவர்களுக்குப் படிப்பு ஏறவில்லை என்று நினைத்து எப்போதும் அவர்களை மட்டம் தட்டியே பேசிக் கொண்டிருப்பார்கள்.
உண்மையில் மாணவர்கள் சிலர் படிப்பில் பின்தங்கியிருப்பதற்கு அவர்கள் கற்றல் குறைபாடு உள்ளவர்களாக இருப்பதே காரணம். கற்றல் குறைபாடு என்பது நரம்பியல் அல்லது மூளை சம்பந்தமான குறைபாடு. மொழி மற்றும் கற்றல் சார்ந்த விஷயங்களைப் பிரித்தறியும் தன்மையில் மூளையில் ஏற்படும் குறைபாடு ஆகும். ஒன்றுபோல் ஒலிக்கும் வார்த்தைகளைப் பிரித்தறிதலில் அவர்களுக்குக் குழப்பம் ஏற்படும். தவறாகப் பென்சிலைப் பிடித்தல், தெளிவற்ற கையெழுத்து எல்லாம் கற்றல் குறைபாட்டின் வெளிப்பாடுகளே.
இந்நூலில் டிஸ்லெக்ஸியா, டிஸ்கால்குலியா, டிஸ்கிராபியா, டிஸ்பிராக்சியா உள்ளிட்ட பத்துவிதமான கற்றல் குறைபாடுகளைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றையும் எவ்வாறு சீர் செய்வது, குறைபாடுள்ள குழந்தைகளுக்கு எந்தவிதமான பயிற்சிகளைத் தருவது, ஒவ்வொரு வகை கற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு தரப்பட வேண்டிய உணவுகள் எவை என்பன குறித்து கூறப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளைச் சீர்படுத்த என்ன செய்ய வேண்டும் ஆகிய விவரங்கள் மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இந்நூலை வாசித்தவர்கள் எந்தக் குழந்தையையும் பார்த்து, 'சரியான மக்காக இருக்கிறாயே?; என்று இனிமேல் கூற மாட்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...