தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

இலக்கு: ஐஏஎஸ்

தேர்வர்களுக்கு குடிமைப் பணித் தேர்வு பற்றிய முழுமையான புரிதலை வழங்கும் நோக்கில் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள நூல் இது.

News image
Updated On :23 மே 2025, 8:33 am

DIN

இலக்கு: ஐஏஎஸ் - சஜ்ஜன் யாதவ்; தமிழில்: பிஎஸ்வி குமாரசாமி; பக்.390; ரூ.499; மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், 2 ஆவது தளம், உஷா ப்ரீத் காம்ப்ளெக்ஸ், 42, மாள்வியா நகர், போபால்-462 003.

உலகின் மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றாக இந்திய குடிமைப் பணிகள் தேர்வு கருதப்படுகிறது. இதில் வெற்றிபெற்ற 7 இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் குறித்தும் தேர்வில் வெற்றிபெற அவர்கள் பின்பற்றிய உத்திகள் குறித்தும் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது. முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடைபெறும் குடிமைப் பணித் தேர்வின் நடைமுறைகள் மற்றும் அதற்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் பற்றிய விளக்கப்படமும் தரப்பட்டுள்ளது. இது தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாணவர்கள் அறிந்துகொள்ள உதவுகிறது.

8 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில் முதல் 7 அத்தியாயங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்வை எதிர்நோக்கிய விதமும் எட்டாவது அத்தியாயத்தில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெறுவதற்கான சூத்திரங்களும் இடம்பெற்றுள்ளன. அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, மீண்டெழுதல், தன்னம்பிக்கை, நேர நிர்வாகம், அழுத்தத்தைக் கையாள்வது, மனஉறுதி, ஊக்கம் ஆகியவை இந்தத் தேர்வுக்குத் தேவைப்படும் பல்வேறு பண்புகளாக விவரிக்கப்பட்டுள்ளன.

சில ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரே முயற்சியில் தேர்வில் வெற்றிபெற்றதையும், சிலர் பல முயற்சிகளுக்குப் பின் வெற்றிபெற்றதையும் ஒருசேர இந்த நூலின்மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. இது வருங்காலத்தில் தேர்வெழுதும் மாணவர்கள் தங்களுடைய தவறுகளைத் திருத்திக் கொண்டு தேர்வில் விரைவாக வெற்றி பெற வழிகாட்டுகிறது.

இறுதியாக, பின்னிணைப்பு பகுதியில் ஒவ்வோர் அதிகாரியும் மூன்று கட்டத் தேர்வுக்கும் அவர்கள் படித்த புத்தகங்கள், நாளிதழ்கள், பின்பற்றிய வலைதளங்கள் என பாடவாரியாக தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு பயிற்சி மையத்துக்குச் சென்று தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களை மிகவும் சுருக்கமாக இந்தப் பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.