தமிழ் இலக்கியத்தில் பெண்மை
இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பெண்ணியச் சிந்தனைகளின் வரலாற்றைக் கூறுவதாக உள்ளது.

தமிழ் இலக்கியத்தில் பெண்மை - நிர்மலா மோகன்; பக். 232; ரூ.220; வானதி பதிப்பகம், சென்னை-17; ✆ 044-2434 2810.
'பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா' என்கிற மகாகவி பாரதியின் கூற்றும், 'மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா' என்கிற கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கூற்றும் இந்த நூலுக்கான அடிப்படை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் தாய் தெய்வ வழிபாடு குறித்த பல செய்திகள் காணப்படுகின்றன. இந்தச் செய்திகளின் அடிப்படையில் தாய் தெய்வ வழிபாடு 3 நிலைகளாக தொகுக்கப்பட்டுள்ளன.
அவை: பழங்குடி இனத்தாரிடையே வழங்கிய தாய் தெய்வ வழிபாடு, பழந்தமிழரிடையே விளங்கிய கொற்றவை வழிபாடு, இந்திய-ஆரியர் கலப்பு வழிபாடாகிய துர்கை வழிபாடு என அறிய முடிகிறது.
சங்க காலப் பெண்மணிகள் கல்வி, கேள்வி, வீரம், கற்பு, மானம் ஆகிய பண்புகளில் சிறந்து விளங்கியமை இரண்டாவது கட்டுரையான சங்கப் பெண்பாற் புலவரின் ஆளுமைத் திறனில் கூறப்பட்டுள்ளது.
'வான்புகழ் வள்ளுவர் பார்வையில் பெண்கள்' என்ற கட்டுரை ஆய்வாளர்களுக்கு விருந்து என்ற சொல்லத்தக்க வகையில் குறள்கள் வழி பெண்களின் பண்புகள் விளக்கப்பட்டுள்ளன.
இல்லறம்தான் சமூகத்தின் அலகு. அது சிறப்பாக இருக்க வேண்டும். இல்லறத்தின் பெருமையும் சிறுமையும் மனைவியையே சார்ந்ததாகும்.
பாரதி போற்றும் பெண்மை, பாரதிதாசனின் பெண் முன்னேற்றச் சிந்தனைகள், கண்ணதாசன் திரையிசைப் பாடல்களில் பெண்ணியச் சிந்தனைகள், புதுக்கவிதை, ஹைக்கூ கவிதைகளில் பெண்ணியச் சிந்தனைகள் என இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பெண்ணியச் சிந்தனைகளின் வரலாற்றைக் கூறுவதாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...