சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

ஜிஎஸ்டி பற்றி அதிகம் தெரிந்து கொள்ளுங்கள் (கேள்வி பதில் வடிவில்-எளிய தமிழில் விளக்கம்)

ஜிஎஸ்டி குறித்து அறிந்துகொள்ள விரும்பும் வணிகர்கள் மற்றும் அனைத்துத் தரப்பினருக்கும் பயனுள்ள நூல்.

News image
Updated On :9 செப்டம்பர் 2025, 5:16 am

DIN

ஜிஎஸ்டி பற்றி அதிகம் தெரிந்து கொள்ளுங்கள் (கேள்வி பதில் வடிவில்-எளிய தமிழில் விளக்கம்) - சு.செந்தமிழ்ச் செல்வன்; பக். 550; ரூ.600; மணிமேகலைப் பிரசுரம்; சென்னை-17; ✆ 044-2434 2926.

சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி, இந்தியாவில் 2017-இல் அறிமுகம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறை என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி குறித்த தகவல்களை கேள்வி பதில் வடிவில் விரிவாக அளித்திருக்கிறார் நூலாசிரியர்.

இ-காமர்ஸ் ஆபரேட்டர்கள் எந்த ஜிஎஸ்டி படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்? ஜிஎஸ்டி தணிக்கையின்போது வரி செலுத்துபவர் பின்பற்ற வேண்டிய கடமைகள் எவை? ஜிஎஸ்டி குற்றங்களுக்கான தண்டனை மற்றும் அபராதம் எந்த அடிப்படையில் விதிக்கப்படுகிறது? செலுத்த வேண்டிய வரியைக் குறைவாக செலுத்தினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பன போன்ற கேள்விகளுக்கு எளிய முறையில் விளக்கங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

ஜிஎஸ்டியில் செலுத்திய வரியை திரும்பப் பெறுதல் (ரீஃபண்ட்) குறித்து வணிகர்கள், தொழில் நிறுவனங்களை நடத்துவோர் பலருக்கு சரியான புரிதல் இல்லை. அவர்களுக்கு உதவும் வகையில் ஜிஎஸ்டி ரீஃபண்ட் என்ற தலைப்பிலான கட்டுரையில் அதிகமான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஜிஎஸ்டியில் பதிவு செய்யப்பட்ட ஒருவர், தனது வாடிக்கையாளர்களுக்கு இனிப்புகள், சாக்லெட்டுகள், கேக்குகள், உலர் பழங்கள், உடனடியாக உட்கொள்ளக்கூடிய பழச்சாறுகள் ஆகியவற்றைக் கொண்ட பரிசுப் பெட்டி வழங்கினால், இவற்றில் உயர்ந்த ஜிஎஸ்டி விகிதம் கொண்ட பழச்சாறுக்கான ஜிஎஸ்டியே முழு பரிசுப் பெட்டிக்கும் வழங்கப்படும் என்பது போன்ற சிறுசிறு தகவல்கள் ஏராளம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.