மீண்டும் தலைப்புச் செய்திகள்

வெளிநாடுகளின் ஊடகங்களுக்கு நம்மவர்களும் இணையானவர்கள்தான் என்பதற்கு சான்று பகிர்கிறது இந்தப் புத்தகம்.
மீண்டும் தலைப்புச் செய்திகள்
Updated on
1 min read

மீண்டும் தலைப்புச் செய்திகள்-ராஜா வாசுதேவன்; பக்.514; ரூ.620; தழல் பதிப்பகம், சென்னை- 600 040, ✆ 93608 60699.

ஊடகத்தின் அடிநாதமே ஏற்றத்தாழ்வில்லாத சமநோக்குப் பார்வையால் இந்த சமுதாயத்தை அணுக வேண்டும் என்பதுதான். அதுவும் காட்சி ஊடகங்கள் அப்படி அணுகும்போது எண்ணிலடங்கா சவால்களைச் சந்திக்க நேரிடும் என்பதை தரவுகளுடன் விளக்குகிறார் நூலாசிரியர்.

மிகவும் சவாலான சம்பவங்களை ஆட்சியாளர்களின் அநியாய அடக்குமுறைகளையும் தாண்டி செய்திகளாக வெளிக் கொணர்ந்து மக்களின் முன்னால் போட்டு உடைத்து உண்மையை உலகறியச் செய்த முயற்சிகளைப் பற்றிய ஒரு மீள் பதிவு இத்தொகுப்பு.

வளர்ப்பு மகன் திருமணம், பிரேமானந்தா ஆசிரமம், கலைஞர் கைது, பிரபாகரனின் பேட்டி என தமிழக மக்களின் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்த வரலாற்று சம்பவங்களை வெளிக்கொணர்ந்தது எப்படி என்பதை துப்பறியும் கதைகள்போல நமக்குக் காட்டப்படுகிறது. நூலாசிரியர் சொன்னதுபோல் புனைவின் சதவிகிதம் எத்தனையானாலும் சுவாரஸ்யம் நூறு சதவிகிதம்.

எல்லாமே நடந்து முடிந்த சம்பவங்கள்தான் என்றாலும், அதை ஆசிரியர் சொல்லி இருக்கும் விதம் நம்மை அந்த நாள்களுக்கே அழைத்துச் செல்கின்றன. வெளிநாடுகளின் ஊடகங்களுக்கு நம்மவர்களும் இணையானவர்கள்தான் என்பதற்கு சான்று பகிர்கிறது இந்தப் புத்தகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com