புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்-இலக்கிய விமர்சனம்-வல்லிக்கண்ணன், பக்.336; ரூ.400; முல்லை பதிப்பகம், சென்னை-600 040, ✆ 98403 58301.
தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல் என்று சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே மகாகவி பாரதியார் புதுக்கவிதையின் இலக்கணங்களை எடுத்துக் கூறியிருக்கிறார்.
யாப்பு, இலக்கணம், அணி என்று அசைக்க முடியாத சட்டங்கள் இட்டு; எதுகை, மோனை, சீர், தளை என்றெல்லாம் நனைந்துபோன சிந்தனைகள் எடுத்து அளித்து வந்த தமிழ்க் கவிதைக்கு கோபாலகிருஷ்ண பாரதியாரும், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் ஓரளவுக்குப் புத்துயிர் தந்தார்கள்; கவிதையோடு இசை என்னும் உயிர் சேர்த்து கவிதை செய்தார்கள் என்று கவிதையின் பிதாமகரான மகாகவி பாரதியாரை எல்லாப் பகுதிகளிலும் நினைவுகூர்ந்துள்ளார் நூலாசிரியர்.
அன்றைய நாள்களில் வெளிவந்த மணிக்கொடி, தாமரை, சூறாவளி, கலா மோஹினி உள்ளிட்ட பல்வேறு இதழ்களையும், அவற்றில் கவிதைகள் குறித்து வந்த கருத்துகள், எதிர்வினைகளை துல்லியமான தரவுகளுடன் வல்லிக்கண்ணன் பதிவிட்டு இருப்பது பொக்கிஷங்கள்.
கு.ப.ரா., ந.பி., திகசி, க.நா.சு., துரைஸ்வாமி, லாசரா, சி.மணி என எல்லோருமே புதுக்கவிதையின் வளர்ச்சியில் தங்களையும் இணைத்து கவிதைகள் புனைந்திருக்கிறார்கள்.
'கவிதை சொற்களில் இல்லை; ஒலி நயத்தில் இல்லை; கருத்தில் திறக்கும் உணர்வு நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டும் தரம் பொதிந்து கிடைக்கிறது'. இதுதான் பிச்சமூர்த்தியின் விளக்கம். இதுவே இன்று ஹைக்கூ வரை பொருந்தி வருகிறது என்றால் அது மிகையல்ல.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.