லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஸ்ரீலஸ்ரீ சகஜானந்தர் சட்டமன்ற உரைகள்

பட்டியலின மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்ட ஸ்ரீலஸ்ரீ சகஜானந்தர் 1927 முதல் 1959-ஆம் ஆண்டுவரை, பல்வேறு காலகட்டங்களில் தமிழக சட்டப்பேரவையில் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

Published On :7 ஜூலை 2026, 3:42 pm IST

ஸ்ரீலஸ்ரீ சகஜானந்தர் சட்டமன்ற உரைகள்- ம. வெங்கடேசன்; பக். 664; ரூ. 780; சுவாசம் பதிப்பகம், சென்னை- 600 127, ✆ 81480 66645.

பட்டியலின மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்ட ஸ்ரீலஸ்ரீ சகஜானந்தர் 1927 முதல் 1959-ஆம் ஆண்டுவரை, பல்வேறு காலகட்டங்களில் தமிழக சட்டப்பேரவையில் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

அரசு புறம்போக்கு நிலங்களை பட்டியலினத்தவருக்கு இலவசமாக வழங்குதல், அவர்களை ஐசிஎஸ் தேர்வுக்குத் தேர்ந்தெடுத்தல், காவல் துறையில் பாதிக்குமேல் பட்டியலினத்தவரை நியமித்தல் என பட்டியலினத்தவரின் முன்னேற்றத்துக்காகவும், பாதுகாப்புக்காகவும் அவர் குரல் எழுப்பியுள்ளார்.

'எல்லா நன்மைகளையும்விட மதுபான தீமையே பெரிதாயிருப்பதால், அதை அடியோடு ஒழிக்க வேண்டும்' என்று 1929-ஆம் ஆண்டே அவர் வலியுறுத்தியுள்ளார்.

மலேயா, சீனா முதலான நாடுகளில் அந்த நாட்டு தாய்மொழிகளில் நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும், இந்தியாவிலும் அவ்வாறே நடைபெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மகாத்மா காந்தி, மூதறிஞர் ராஜாஜி ஆகியோர் மீது சகஜானந்தருக்கு மிகுந்த மதிப்பு இருந்துள்ளது. அதேவேளையில், கருப்புச் சட்டை குடியரசு இயக்கத்துடன் முரண்பட்டு இருந்துள்ளார்.

பட்டியலினத்தவர் எண்ணிக்கையை நினைவில் வைத்து, அதற்கேற்ப அந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என அப்போதே குரல் எழுப்பியுள்ளார். சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அவர் எழுப்பிய கோரிக்கைகள் நூலில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தக் கோரிக்கைகளில் பல இன்றளவும் நிறைவேற்றப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.