ருஷ்யக் கதைகள் - தமிழாக்கியவர் எம்.எல்.சபரி ராஜன்; பக்.184; ரூ.230; அல்லயன்ஸ், மைலாப்பூர், சென்னை - 600 004. ✆ 044-24641314.
ருஷ்ய மக்களின் கலை, கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களை அந்நாட்டுச் சிறுகதைகள் பிரதிபலிக்கின்றன. ருஷ்ய இலக்கியத்தில் சிறுகதைகள் அதிகம். அச் சிறு கதைகள் ருஷ்ய மக்களின் அக வாழ்வை வெளிப்படுத்துவதோடு மட்டுமன்றி, பிற நாட்டு மக்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்கின்றன.
டால்ஸ்டாய், புஷ்கின், செக்காவ், கார்க்கி, டாஸ்டாவ்ஸ்கி, கார்ஷின், டர்ஜனீவ், கோகோல் ஆகிய தலைசிறந்த எட்டு எழுத்தாளர்களின் 17 சிறுகதைகள் இந்நூலில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.
டால்ஸ்டாயின் 'தெய்வம் நின்று காக்கும்' என்ற சிறுகதை அன்பையும் சத்தியத்தையும் முன்னிலைப்படுத்துகிறது. செங்கொடி என்ற கதை இளைஞனுக்கும் முதியவருக்கும் இடையேயான உளப் போராட்டத்தை விவரிக்கிறது. தியாகம் என்ற கதை ஒரு முயல், ஓநாய்க்கு தான் செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற பட்ட துயரத்தை வெளிப்படுத்துகிறது. மேற்கண்ட மூன்று கதைகளிலும்,சிறுகதைக்கு உரிய கட்டுக்கோப்பு, கதைப்போக்கு, முடிவு ஆகியவை கச்சிதமாகப் பொருந்துகின்றன.
அரசியல், அதிகார வர்க்கத்தை கேலி செய்யயும் விதமாக நூறாண்டுக்கு முன்பு எழுதப்பட்ட செக்காவின் 'பச்சோந்தி' சிறுகதை இன்றைக்கும் பொருந்துவது வியப்பை ஏற்படுத்துகிறது.
பேதை, ஓர் இரவு ஆகிய கதைகள் பெண்களின் நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்கின்றன. பிள்ளைப் பாசம், இரு தோழர்கள், நாணயமான திருடன் ஆகிய கதைகள் பொதுவான மனித இயல்புகளைச் சித்தரிக்கின்றன. சிறந்த உணர்ச்சி சித்திரங்களாக மேலங்கி, மணிகாரன் ஆகிய சிறுகதைகள் அமைந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









