
தமிழ் எனும் நான்
நாட்டின் மொழியை எதிர்த்துப் போராடியவர்களுக்கு சலுகைகள் தரக் கூடாது என்று நீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப் போராட்டங்களும் விரிவாகத் தரப்பட்டுள்ளது சிறப்பு.

தமிழ் எனும் நான்- மு.ராஜேந்திரன்; பக். 372; ரூ. 500; அகநி வெளியீடு, சென்னை-600 092. ✆ 94443 60421.
இயற்கை ஆர்வலர், எழுத்தாளர், சமூக நலன் விரும்பி என்று பன்முகத் தன்மைகளைக் கொண்டவர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலரான நூலாசிரியர். தமிழ், வரலாற்று நூல்கள் பலவற்றை எழுதியுள்ள இவர், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்த வரலாற்று நூலை புதுமையான முறையில் எழுதியிருக்கிறார்.
ஹிந்தித் திணிப்புக்கு 1935-ஆம் ஆண்டு முதல் போராட்டம் நடைபெற்று வந்தது. இருந்தாலும், 1965-ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மாணவர் அமைப்பினரால் நடத்தப்பட்ட போராட்டங்கள் இந்திய அளவில் அதிரவைத்து இருமொழிக் கொள்கையை இன்றளவும் பின்பற்றும் மாநிலமாக தமிழ்நாடு உருவாகியதை நூலில் எடுத்துரைத்துள்ளார் நூலாசிரியர்.
கூடலூரில் தபால் நிலையம் மீது தாக்குதலும், அதைத் தொடந்து காவல் நிலையம் எரிக்கப்பட்டு இரு காவலர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தெரிவித்து, அந்த வழக்கில் இருந்து மீண்டு வந்தவர்கள் வாயிலாக உணர்வுமிக்க மொழிப் போராட்டம் குறித்து கூறப்பட்டுள்ளது. மாணவர்களுடன் அரசியல் கட்சியினர், தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ச் சங்கங்களும் களம் இறங்கியதையும் நூலாசிரியர் வெளிக்கொணர்கிறார்.
மொழிப் போராட்டத்தை ஒடுக்க மாநில அரசு ஏவிவிட்ட அடக்குமுறைகள், சட்ட நடவடிக்கைகள், காவல் துறையின் தாக்குதல்கள் போன்றவற்றில் இருந்து தப்பித்தவர்கள், மீண்டவர்கள் வழியில் உரைநடையாக எளிய நடையில் படித்தறியலாம். போராட்டத்துக்குப் பின்னர் ஆட்சி மாற்றத்தையடுத்து மொழிப்போர் வீரர்கள் பெற்ற அரசியல்- அரசுப் பணி அங்கீகாரம், அவர்களின் வாரிசுகள் பெற்ற கல்வி-வேலைவாய்ப்புச் சலுகைகள், சமூக அந்தஸ்து போன்ற முழு விவரங்களையும் அறியலாம்.
நாட்டின் மொழியை எதிர்த்துப் போராடியவர்களுக்கு சலுகைகள் தரக் கூடாது என்று நீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப் போராட்டங்களும் விரிவாகத் தரப்பட்டுள்ளது சிறப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






