இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்

தேவநேயப் பாவாணர் குறித்து அறிந்துகொள்வதற்கான சிறந்த கையேடு.

Published On :

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்- வரலாற்றுச் சுவடுகள், தொகுப்பு- பொழிலன்; பக். 456, ரூ. 500; மன்பதை பதிப்பகம் பாவலரேறு கணினியகம், சென்னை- 600 100. ✆ 90929 48002.

இவர்தாம் பாவாணர் என்ற பெருஞ்சித்திரனாரின் அறிமுகக் கட்டுரையுடன், பாவாணர் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகத் தரும் புலவர் இறைக்குருவனார், கல்விப் பணியுடன் அவர் வாழ்வின் போராட்டங்களையும் சாதனைகளையும் விவரித்திருக்கிறார்.

பாவாணரின் நூல்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டிருப்பதுடன் ஒவ்வொன்றைப் பற்றியும் சிறு குறிப்புகளும் தரப்பட்டிருக்கின்றன. கூடவே, தென்மொழி இதழில் பாவாணர் எழுதியவையும் பட்டியலிடப்பட்டுள்ளன.

பாவாணர் எழுதிய நூல்கள் குறித்த தகவல்கள், கட்டுரைகள், தன்விளக்கக் குறிப்புகள், பாவாணர் பற்றி மற்றவர்கள் எழுதிய நூல்கள், பிறரைப் பாவாணர் எவ்வாறு கருதினார், பாவாணரை அறிஞர்கள் எவ்வாறு கருதினர் என நிறைய செய்திகள் தரப்பட்டிருக்கின்றன.

பாவாணர் தன்னுடைய எந்தவொரு நூலுக்கும் வேறு எவருடைய அணிந்துரையையும் பெற விரும்புவதில்லை; அவருடைய நூல்கள் எதிலும் அவருடைய முன்னுரை, அணிந்துரை மட்டுமே இருக்கும் என்று குறிப்பிடுகிறார் பாவாணர் இயல்பு பற்றிக் கூறும் அவர் மகன் மணி.

பெரியார் ஈவெராவுக்கு விடுத்த வேண்டுகோளும், திரு.வி.க.விடம் கண்ட பண்புகள் பற்றியுமான பாவாணரின் கட்டுரைகளுடன் மேலும் அவருடைய சில மடல்களும் கட்டுரைகளும் உரைகளும் நூலில் இணைக்கப்பட்டுள்ளன.

தமிழன் உரிமை வேட்கை போன்ற பாவாணரின் சிறப்புமிக்க கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. மறைவுக்குப் பிறகு, பாவாணர் நூல்களைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் எடுத்துக் கொள்வதில் நடந்த அரசியலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாவாணர் மறைவுக்குப் பிந்தைய இரங்கல் செய்திகளுடன், நிறைவில் தொடர்புடைய புகைப்படங்களும் தரப்பட்டுள்ளன.

பெருஞ்சித்திரனாரைப் போலவே அவருடைய மகன் பொழிலனும் இந்தத் தொகுப்பின் மூலம் பாவாணருக்குச் சிறப்புச் செய்திருக்கிறார். தேவநேயப் பாவாணர் குறித்து அறிந்துகொள்வதற்கான சிறந்த கையேடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.