அம்மன் மரம்
அறம், நீதி, நியாயம் எல்லாம் அவர்களளவில் முட்டாள்களின் குணாதிசயங்கள்!முற்றடைப்பு, நிலக்கீழ் புகையிரதம், தூசணம், உழவியந்திரம், அதிகூடிய புள்ளிகள், கடவை, சுயமி, பல்துலக்கி, அலைபேசி மின்னேற்றி எனப் பல தமிழ்ச் சொற்கள் அறிமுகம். வாசிக்கச் சிறந்த நாவல்.

அம்மன் மரம்-தமிழ்நதி; பக். 288, ரூ. 320; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை- 600 078. ✆ 99404 46650.
போர் மட்டுமல்ல, ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்வும் இருக்கிறது. ஈழத் தமிழர்தம் வாழ்வின் பகுதியை மிகவும் இயல்பான புதினமாக்கியிருக்கிறார் தமிழ்நதி.
அருந்தவத்தின் வாழ்க்கையின் ஊடாக முன்னும் பின்னுமாகச் செல்லும் நாவலில் வாசிக்கிற எல்லாருக்கும் பிடித்தமானவளாக மகள் மிதிலா. நாவலில் அம்மன் மரமும் அந்த வீடும் பேசாத, ஆனால், பேசப்படுகிற இரு பிரதான பாத்திரங்கள்.
அருந்தவத்தின் கணவர் அம்பலவாணனின் புலம்பெயர் வாழ்வும், நாட்டில் அவருடைய பிள்ளைகளின், முகுந்தன் - வினோதினி, பார்த்திபன் - சந்தியா, காண்டீபன் - திவ்யா, நீதன் அமலி, விதவிதமான வாழ்வும் கதையோட்டத்தில் மிக நுட்பமாகச் சித்திரிக்கப்படுவதுடன் இலங்கையின் வாழ்வியல் சூழலையும் வெளிப்படுத்துகிறது.
புதிராகக் கிடக்கிறது மிதிலாவின் மனசு. முழு நாவலும் ஏங்கியே கழிகிறது தயாளனின் வாழ்வு - காதல் அற்புதமானது; அரிதான அற்பத்தனங்
களைக் கொண்டதும்கூட. தவிர, ஒரே பத்தியில் வரும் மிதிலாவின் அதிகாலைக் கனவுச் சித்திரிப்பு சிறப்பு. திருமாறன்-தேவி-அநிருத்தன் இளம்பருவக் காதல் தனிக்கதை.
கோபப்படும்போது எல்லாருடைய முகங்களிலும் இருளடைந்து விடுகிறது, காற்றைப் போல அந்த வீட்டின் ஒவ்வொரு அறையுள்ளும் இல்லாமை அலைந்து திரிந்தது என நிறையச் சொல்கிறார் ஆசிரியர்.
நாவலில் தெய்வேந்திரத்தில் தொடங்கிப் பலரும், சரியோ, தவறோ ஆளுக்கோர் ஆசையுடன், பெரும்பாலும் நிறைவேறாதனவற்றுடன் நகர்கிறார்கள்.
அருந்தவம் நினைக்கிறாள்: போருள் வாழ்ந்த தலைமுறைக்கென்று சில விழுமியங்கள் இருந்தன. ஆனால், இந்தத் தலைமுறையினரில் பெரும்பாலானோருக்குப் பணத்தைத் தவிர வேறு தேடல்கள் இல்லை. ஆன்மாவைத் திருப்திப்படுத்தும் எதுவும் அவர்களுக்கு வேண்டியதில்லை. அறம், நீதி, நியாயம் எல்லாம் அவர்களளவில் முட்டாள்களின் குணாதிசயங்கள்!முற்றடைப்பு, நிலக்கீழ் புகையிரதம், தூசணம், உழவியந்திரம், அதிகூடிய புள்ளிகள், கடவை, சுயமி, பல்துலக்கி, அலைபேசி மின்னேற்றி எனப் பல தமிழ்ச் சொற்கள் அறிமுகம். வாசிக்கச் சிறந்த நாவல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

