அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

முன்னத்தி ஏர்

மனித மனம் எப்போது சமாதானம் அடையும்? எப்போது முரண்டு பிடிக்கும்? என்பது புரியாத புதிர். அப்படி சமாதானம் அடையும் மனமானது எந்தப் புள்ளியில் சமாதானம் அடைகிறது என்பதை இந்தக் கதைகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

Published On :

முன்னத்தி ஏர்-மஹா சாஸ்தா; பக். 138; ரூ. 200; வசந்தா பிரசுரம், சென்னை-600 033, ✆ 90948 75747.

ஒரு சிறுகதை என்பது, அதில் கூறப்பட்டிருக்கும் நிகழ்வுகள், கதாபாத்திரங்களின் தோற்றம் குறித்த வர்ணனைகள், பேசுகிற மொழி உள்பட எல்லாமே அதை வாசிப்பவர்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமானதாக இருக்கும்போது கூடுதல் ஈர்ப்பைத் தரும்; வாசிக்கும் முனைப்பு அதிகரிக்கும். அது இந்தத் தொகுப்பில் உள்ள எல்லா சிறுகதைகளிலும் தெரிகிறது.

ஒரு கிளியைப் பிரிந்து செல்லும் மனதானது நமக்கு நெருங்கிய அன்பு மிகுந்த உறவினரின் மறைவை ஏற்றுக்கொள்ளும் புள்ளிக்கு ஒப்பானது; 786 எண் கொண்ட ரூபாய் நோட்டுக்காக அங்கலாய்க்கும் மனதானது வாழ்வின் எதார்த்த போக்கை ஏற்றுக்கொண்டு சமாதானம் அடைகிறது; பல ஆண்டுகளுக்குப் பின்பு நோயாளி நண்பரை எதிர்பாராமல் சந்தித்ததும், காரில் வீட்டுக்குச் செல்லாமல் நடந்து செல்லும் மருத்துவரின் அனுபவம் எல்லோருக்குமானது.

மனித மனம் எப்போது சமாதானம் அடையும்? எப்போது முரண்டு பிடிக்கும்? என்பது புரியாத புதிர். அப்படி சமாதானம் அடையும் மனமானது எந்தப் புள்ளியில் சமாதானம் அடைகிறது என்பதை இந்தக் கதைகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

பேருந்து பயணத்திலோ, வெயிலின் தாக்கத்திலோ, குக்கர் விசிலின் சப்தத்திலோ என கவனத்தைத் திருப்பும் எந்தப் புள்ளியில் இருந்தும் ஒரு சிறுகதைக்கான விதை துளிர் விடும். இதில் உள்ள 20 சிறுகதைகளும் அப்படித்தான் இருக்கும் என புரிந்துகொள்ள முடிகிறது.

அனைத்துக் கதைகளிலும் கையாளப்பட்டு இருக்கும் மொழி நடையானது கவித்துவமாக உள்ளது. குறிப்பாக, ஆங்காங்கே கூறப்படும் எடுத்துக்காட்டுகள் புதுமையாக உள்ளன. மேலும், கதைகளின் போக்கு சாத்தியமான நிகழ்வுகளை மட்டுமே சொல்வதாக அமைந்திருப்பது எதார்த்தத்தின் கூடுதல் பதிவாக அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.