அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

சர்க்கரை வியூகம்

கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவால் ஏற்படும் பாதிப்புகள் என அந்நோய் குறித்த அடிப்படைத் தகவல்கள் அனைத்தையும் எளிய நடையில் விளக்கியுள்ளார் நூலாசிரியர்.

Published On :

சர்க்கரை வியூகம்- சித்த மருத்துவர் டி.பாஸ்கரன்; பக். 64; ரூ. 55; தேநீர் பதிப்பகம், ஜோலார்பேட்டை-635 851. ✆ 90809 09600.

பொதுவாக சர்க்கரை நோய் என்றாலே ஆங்கில மருத்துவத்தின் மூலம்தான் அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்ற கருத்து உள்ளது. உண்மையில் அந்நோய் வராமல் தடுக்கவும், வந்தால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும், இயற்கை மருத்துவம் பெரிதும் உதவுகிறது என்பதை அறிவியல்பூர்வமாக விளக்குகிறது இந்நூல்.

மனித உடலில் கணையத்தின் பணிகள் என்னென்ன?, ஏன் சர்க்கரை நோய் வருகிறது?, ரத்த சர்க்கரை அளவு எந்த நேரத்தில் எப்படி இருக்க வேண்டும்?, கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவால் ஏற்படும் பாதிப்புகள் என அந்நோய் குறித்த அடிப்படைத் தகவல்கள் அனைத்தையும் எளிய நடையில் விளக்கியுள்ளார் நூலாசிரியர்.

ஆங்கில மருத்துவத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகளை விளக்கியதுடன், அதற்கு நிகராக சர்க்கரை நோய்க்கு சித்த மருத்துவத்தில் என்னென்ன தீர்வுகள் உள்ளன என்பதும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஒரு மருத்துவ முறையின் உன்னதத்தை கூறுவதற்காக மற்றொன்றை விமர்சிக்க வேண்டிய கட்டாயமில்லை என்பதை இந்த குறு நூலை வாசிக்கும்போது உணர முடிகிறது.

சர்க்கரை நோய் மட்டுமல்லாது, ரத்த அழுத்த பாதிப்புகள், மலச் சிக்கல் போன்ற வாழ்வியல் நோய்களையும் சித்த மருத்துவத்தின் வாயிலாக குணப்படுத்தும் வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.

சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுப் பழக்கமும், உடற்பயிற்சியும் எளிய நடையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கான யோகாசனப் பயிற்சிகள் படங்களுடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. நடைப்பயிற்சியைக் காட்டிலும் நல்ல பலன்களை அந்த ஆசனங்கள் அளிப்பது அறிவியல்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை முறையால் எப்படி சர்க்கரை நோயை வெல்லலாம் என்பதை வெறும் 64 பக்கங்களில் தெளிவாக விளக்கும் முக்கிய நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.