பனையறம்

தினமணி உள்ளிட்ட பல ஏடுகளில் வெளியான 64 கட்டுரைகளின் தொகுப்பு. ஏற்கெனவே இந்தக் கட்டுரைகள் தனித்தனியே நான்கு புத்தகங்களாக வெளிவந்தவை. இப்போது முழு தொகுப்பாக ஒரு நுôலாக வெளியிட்டுள்ளார்.

Published On :

பனையறம் -கட்டுரைகள்- ஜெயபாஸ்கரன்; பக். 496; ரூ. 650; வழுதி வெளியீட்டகம், சென்னை-600 044. ✆ 94449 56924.

தினமணி உள்ளிட்ட பல ஏடுகளில் வெளியான 64 கட்டுரைகளின் தொகுப்பு. ஏற்கெனவே இந்தக் கட்டுரைகள் தனித்தனியே நான்கு புத்தகங்களாக வெளிவந்தவை. இப்போது முழு தொகுப்பாக ஒரு நுôலாக வெளியிட்டுள்ளார்.

இந்தக் கட்டுரைகளில் பலவும் வெளியாகி பத்து ஆண்டுகள் ஆகியிருக்கும். ஆனாலும், அந்தக் கட்டுரைகளின் மையக்கருத்து இன்றைக்கும் அவசியமானதாக, அர்த்தமுள்ளதாக இருப்பதுடன், அந்த பிரச்னைகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதை கருதும்போது இந்தப் புத்தகத்தின் அருமையை உணர முடியும்.

கல்வி, சுற்றுச்சூழல், வணிகமயம், ஆங்கில மோகம், முடிவுறாத நீதிமன்ற போராட்டங்கள், விவசாயிகளின் கண்ணீர் என அவர் தொடாத விஷயங்களே இல்லை. எல்லாவற்றின் மீதும் தனித்த பார்வை, கறாரான கருத்து. படிக்கிற வாசகனும் அந்தக் கருத்துடன் ஒத்திசைந்து, ஆம் என்று சொல்வதுதான் கட்டுரையின் வலிமை.

நம் கல்வி முறை, நாம் குழந்தைகளை வளர்க்கும் விதம் குறித்தும், நம் கலாசாரத்தை, இந்த மண் மறந்துகொண்டிருக்கும் வேகம் குறித்தும் நமக்குப் புரிய வைத்துவிடுகிறார். அவரது அறச்சீற்றம் வாசகனின் இதயத்திலும் மெல்ல கனன்று சிவக்கிறது.

குறிப்பாக, அரசியல்-ஊடகம் இரண்டிலும் இன்றைய நாளில் காணப்படும் சமரசங்கள், அர்த்தமற்ற நிகழ்ச்சிகள், வணிகத் திரையின் வெற்றி வேட்கை குறித்து அவர் முன்வைக்கும் கருத்தும் சீற்றமும் நியாயமானவை.

வெளியுலகைப் பார்க்கும் அதே நுட்பத்துடன் தன் தந்தை குறித்த அவரது பார்வையும் பதிவும் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் அவர்களுக்காக வாழும் தியாக தீபங்களைப் பார்த்து, உதவி உடன் மகிழ வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி விடுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.