சிங்கப்பெண் சிவகங்கை வேலுநாச்சியார்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் மறக்கப்பட்ட வரலாற்றை அறிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல்.

Published On :

சிங்கப்பெண் சிவகங்கை வேலுநாச்சியார் - செ. சசிகலா தேவி; பக். 144; ரூ. 140; சுரா பதிப்பகம், சென்னை-600 040. ✆ 044-4862 9977.

சிவகங்கை சீமையை ஆட்சி செய்த முத்துவடுகநாதரை முன்பகையின் காரணமாக ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி செய்து கி.பி. 1772-இல் கொன்றுவிடுகின்றனர்.

அவர்களிடமிருந்து தப்பிய அவரது மனைவி வேலுநாச்சியார், தனது 8 வயது மகளுடன் 8 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, நல்லோரின் துணையுடன் பெரும் படையை திரட்டி, இழந்த நாட்டை ஆங்கிலேயர்களிடமிருந்து தீரத்துடன் மீட்ட நீண்ட நெடிய வரலாற்றை வெகு சுருக்கமாகவும், சுவாரசியமாகவும் இந்நூல் விவரிக்கிறது.

நூலின் தொடக்கத்திலேயே வாசகர்களுக்கு உதவும் விதமாக, வேலுநாச்சியாருடன் பயணிப்பவர்களின் விவரங்கள் தரப்படுவதால், நூலை எளிதாக படித்துவிட முடிகிறது.

போர்ப் படையில் முதல்முதலில் பெண்கள் படைப் பிரிவை உருவாக்கிய சிறந்த ராஜதந்திரியான வேலுநாச்சியார், சிவகங்கையை மீட்க செல்லும் முன்பாக திண்டுக்கல் கோட்டையில் வீரர்களிடையே நிகழ்த்தும் எழுச்சிமிகு உரை அவரது நாட்டுப்பற்றையும், போர்த் திறனையும் உணர்த்துகிறது.

வேலுநாச்சியாரை காட்டிக் கொடுக்க மறுத்ததால் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்ட 12 வயது சிறுமி உடையாள், புகலிடம் அளித்து காப்பாற்றிய கோபால நாயக்கர், போர்களில் துணை நின்ற மருது சகோதரர்கள், அமைச்சர் தாண்டவராயர், தற்கொலை தாக்குதல் நடத்தி உயிர்நீத்த படைத்

தளபதி குயிலி உள்ளிட்ட பலரின் வரலாறு எளிமையாகவும், உணர்வுபூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலுநாச்சியாரின் வீரம் செறிந்த வாழ்க்கையை இளைய தலைமுறையினருக்காக திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பதிவு செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை இந்நூல் அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் மறக்கப்பட்ட வரலாற்றை அறிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.