பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

சாவித்ரிபாய் புலே

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் கல்வி வரலாற்றை மாற்றி அமைத்த இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரான சாவித்ரிபாய் புலேவின் வரலாற்றை கூறுகிறது இந்த நூல்.

Published On :

சாவித்ரிபாய் புலே-சஹானா; பக். 80; ரூ. 125; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை-600 083, ✆ 96003 98660.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் கல்வி வரலாற்றை மாற்றி அமைத்த இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரான சாவித்ரிபாய் புலேவின் வரலாற்றை கூறுகிறது இந்த நூல்.

மகாராஷ்டிரத்தின் சதாரா மாவட்டத்தில் உள்ள நைகாவ் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் 1931-ஆம் ஆண்டு ஜனவரி 3-இல் பிறந்தார் சாவித்ரி. அவருக்கு 9 வயது ஆனபோது, 13 வயதேயான ஜோதிராவ் ஃபுலேவுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

சமூகச் சீர்திருத்த வாதியான ஜோதிராவ், சமத்துவத்திலும் மனித உரிமைகளிலும் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டவர். அவர் தனது மனைவிக்குக் கல்வியை அளித்தார். அந்தக் காலத்தில் பெண்கள் கல்வி கற்றுக் கொள்வதற்கு கடும் எதிர்ப்பு இருந்ததால் இரவில் வீட்டில் மற்றவர்கள் உறங்கிய பிறகே சாவித்ரி படிக்கத் தொடங்கினார்.

அவர் ஆசிரியராக முடிவு செய்து அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டபோது பல்வேறு சவால்களை எதிர்கொண்டார். சாவித்ரி 1948-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் முதலாக தனது கற்பித்தலை தொடங்கினார்.

கதை சொல்லுதல், விளையாட்டுகள், குழுச் செயல்பாடுகள், பாடல்கள், கவிதைகள் போன்றவற்றை கற்பித்தலில் புகுத்தினார். இதனால், மாணவிகளின் எண்ணிக்கை எண்ணிக்கை அதிகரித்தது. மூன்று பள்ளிகளை சாவித்ரிபாய் நடத்தினார்.

எனினும், அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. தெருவில் நடக்கும்போது அவர் மீது சேற்றை அள்ளி வீசினார்கள். குப்பைகளைக் கொட்டினார்கள். எதைக் கண்டும் சாவித்ரிபாய் பின்வாங்கவில்லை.

1890-இல் ஜோதிராவ் இறந்தபோதும் தொடர்ந்து களத்தில் இயங்கிய சாவித்ரிபாய், 1897-இல் தன் இறப்பு வரை பெண் கல்விக்காக அயராது உழைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.