அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வலியுறுத்தல்

பணி நீக்க காலத்தை, பணி காலமாக அறிவிக்க சாலைப் பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 1:01 pm IST

பணி நீக்க காலத்தை, பணி காலமாக அறிவிக்க சாலைப் பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பெரம்பலூரில், தமிழ்நாடு நெடுஞ்சலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் வட்டப் பேரவைக் கூட்டம், சங்க பொறுப்பாளர் கே.மணிவேல் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி. ஆளவந்தார், மாநிலச் செயலர் வி.ஆர். செந்தில்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

கூட்டத்தில், 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக அறிவித்து, பணி நீக்க காலத்தில் உயிரிழந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், தலைவராக பி. குங்குமத்துரை, துணைத் தலைவராக என். ராமசாமி, செயலராக ஆர். விஜயக்குமார், இணைச் செயலராக பி. மாரிமுத்து, பொருளாளராக ஆர். முத்துசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்டத் தலைவர் சி. மகாதேவன், மாவட்டச் செயலர் சி. சுப்ரமணியன், வேப்பந்தட்டை வட்ட இணைச் செயலர் பி. சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட பொருளாளர் ஏ.செல்வக்குமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.