பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் புதன்கிழமை நடைபெற்ற தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில், 122 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகையை மாநில வேளாண் விளைபொருள் விற்பனை வாரியத் தலைவர் மா. ரவிச்சந்திரன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது: 72 பட்டதாரி பெண்களுக்கு திருமண நிதியுதவியாக தலா ரூ. 50 ஆயிரம் வீதம், ரூ. 36 லட்சமும், 10-ம் வகுப்பு முடித்த 50 நபர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம், ரூ. 12.50 லட்சமும் என மொத்தம் 122 நபர்களுக்கு ரூ. 48.50 லட்சம் மதிப்பில் உதவித் தொகையும், தலா 4 கிராம் வீதம் 488 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. அரசு திட்டங்களால் பயன்பெறும் பயனாளிகள் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஏ. சுப்பிரமணியன், ஒன்றியக்குழுத் தலைவர் ஆர்.பி. மருதராஜா, நகர்மன்ற துணைத்தலைவர் ஆர்.டி. ராமச்சந்திரன், ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் சி. பிச்சைபிள்ளை, சமூக நலத்துறை அலுவலர் கி. பேச்சியம்மாள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இனி குரல் மூலம் போட்டோ எடுக்கலாம்! ஐபோன் கேமராவில் புதிய ஏஐ வசதி!

கரூர் பலி: பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! எப்போது?

ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு!

லஞ்சத்தை ஒழிக்க முடியும் என்கிற நம்பிக்கையில்... அரசிற்குக் கோரிக்கை வைத்த இயக்குநர் சீனு ராமசாமி!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


