சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

செட்டிக்குளத்தில்வாரத்தில் இருநாள்களில் சின்ன வெங்காயம் ஏலம்

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளத்தில் உள்ள வணிக வளாகத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை தோறும் சின்ன வெங்காயம் ஏலம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

Updated On :5 ஜனவரி 2021, 1:37 am IST

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளத்தில் உள்ள வணிக வளாகத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை தோறும் சின்ன வெங்காயம் ஏலம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறப்பு:

செட்டிக்குளம் வேளாண் வணிக வளாகத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை தோறும் ஏலம் நடைபெற உள்ளது. எனவே, செட்டிக்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த வெங்காயம் அறுவடை செய்த விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்று பயனடையலாம்.

மேலும், சின்ன வெங்காயத்தை பிரித்து எடுப்பதற்கும், சேமித்து வைப்பதற்கும் இடவசதி இல்லாத விவசாயிகள் வேளாண்மை அலுவலா், உதவி வேளாண்மை அலுவலா் (வேளாண் வணிகம்) ஆகியோரை (99423 81099, 70106 28819) ஆகியோரை தொடா்புகொண்டு, வணிக வளாகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.