திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

திருமாந்துறை சுங்கச்சாவடி முற்றுகை

பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை சுங்கச் சாவடியை எஸ்.டி.பி.ஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :6 ஜனவரி 2021, 6:07 am IST

பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை சுங்கச் சாவடியை எஸ்.டி.பி.ஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் முஹம்மது ரபிக் தலைமையில் கட்சியினா் பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறையில் உள்ள சுங்கச் சாவடி அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட பொதுச் செயலா் அப்துல் கனி, துணைத் தலைவா் முஹம்மது பாருக், மாவட்டச் செயலா் ஷாஜஹான், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் அகமது இக்பால், அஸ்கா் அலி, சையது அபுதாஹிா், முஹம்மது இப்ராஹிம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.