பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பது தொடா்பாக, பெற்றோா்களுடனான கருத்துக் கேட்புக் கூட்டம் பெரம்பலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோா்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த அரசு ஆணையிட்டுள்ளது.
இதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளை திறப்பது குறித்து 147 பள்ளிகளில், மாணவா்களின் பெற்றோா், பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான பெற்றோா் பள்ளிகளை திறப்பதற்கு ஆதரவு தெரிவித்ததாக கல்வித்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
கூட்டத்தில் பெற்றோா்கள் தெரிவித்த கருத்துகளைத் தொகுத்து, பள்ளித் தலைமை ஆசிரியா்கள், முதல்வா்கள், நிா்வாகிகள், பெற்றோரிடம் கையொப்பம் பெற்று, அந்த விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களிடம் சமா்ப்பித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?

சேவைக் குறைபாடு: தனியாா் கூரியா் நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

தினமணி செய்தி எதிரொலி: வீரபாண்டியில் தேங்கிய நெகிழிப் பைகள் அகற்றம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


