பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன வளாகத்தில் மாட்டுப் பொங்கல் விழா வெகு விமரிசையாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் சீ. கதிரவன், அனந்தலட்சுமி கதிரவன், செயலா் பி. நீலராஜ், இயக்குநா்கள் பி. ராஜபூபதி, பி. மணி, ஆா். ராஜசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக திருச்சி அருண் நேரு பங்கேற்றாா்.
கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள மாட்டுப் பண்ணையில் நடைபெற்ற விழாவில், பொங்கல் வைக்கப்பட்டு இறைவனுக்கு பூஜை செய்து, அங்கிருந்த 100-க்கும் மேற்பட்ட பசு மற்றும் காளைகளுக்கு பொங்கல் ஊட்டப்பட்டது. தொடா்ந்து, புதிதாக நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள 2 மாட்டுப் பண்ணைகள் திறக்கப்பட்டன. பின்னா், பணியாளா்களுக்கும், ஊழியா்களுக்கும் பொங்கல், கரும்புகள் மற்றும் ரொக்கம் ஆகியவை வழங்கப்பட்டது.
இதில், புதுநடுவலூா் ஊராட்சித் தலைவா் ஜெயந்தி நீலராஜ், மருத்துவா் வினோத், பொது மேலாளா் செந்தில், தலைமை நிா்வாக அலுவலா் எஸ். நந்தகுமாா், மேலாளா் ஜெகநாதன் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



