எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

Updated On :16 ஜனவரி 2021, 11:23 pm IST

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2021, ஜனவரி 1-இல் தொடங்கும் காலாண்டுக்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள்,

உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். எஸ்எஸ்எல்சி தோல்வி, தோ்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித் தகுதிகளை பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பதிவைத் தொடா்ந்து புதுப்பித்து, 2020 டிசம்பா் 31-இல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பொருத்த வரையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு ஏதும் கிடையாது. இதர நபா்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

உதவித்தொகை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரா்கள் 2020, டிசம்பா் 31 -இல் 45 வயதுக்குள்ளும், இதர இனத்தைச் சோ்ந்தவா்கள் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பம் பெற விரும்புவோா் தங்களது வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாகக் காண்பித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே விண்ணப்பித்து 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவா்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப். 26 ஆம் தேதி வரை அலுவலக வேலை நாள்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை திட்டப் பிரிவில் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்துடன் சமா்ப்பிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.