புதுச்சேரியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மே தினக் கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெரியமார்க்கெட் கிளை சார்பில் பாரதி வீதி பூக்கடை அருகே கொடியேற்று விழா நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வி.சிவகுருநாதன், நகரக்குழு உறுப்பினர் எம்.சுப்பிரமணி, கமிட்டி உறுப்பினர் கே.வைத்தியலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாநிலச் செயலர் ஆர்.விஸ்வநாதன், தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், பொருளாளர் அ.மு.சலீம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர்களுக்கு அட்டைகள் வழங்கப்பட்டன.
ஐ.என்.சி.யு.டி: ஐ.என்.சி.யு.டி. சார்பில் வில்லியனூர் இன்டேன் கேஸ் நிரப்புமிடத்தில் தேசிய கேஸ் லாரி ஓட்டுநர் சங்கத் திறப்பு விழா நடைபெற்றது.
இதனை மாநிலத் தலைவர் ஜி.ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.
இதேபோல், வெங்கடசுப்பாரெட்டியார் சதுக்கம் அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மினி லாரி சங்கப் பலகை திறந்து வைக்கப்பட்டது. இந்திராகாந்தி சதுக்கத்தின் ஆட்டோ சங்கத்தின் கொடியேற்றப்பட்டது.
காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனை மற்றும் சாஷன் மருந்துத் தொழிற்சாலைகளில் ஐ.என்.டி.யு.சி. சங்கக் கொடியேற்றப்பட்டது. நிர்வாகிகள் எஸ்.குமார், ஜி.நரசிங்கம், சொக்கலிங்கம், துரைராஜ், ஞானசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொ.மு.ச: தொ.மு.ச. சார்பில் உப்பளம் தமிழ்நாடு போக்குவரத்துக்கழக பணிமனை, பாரதி மில், சுதேசி மில், சாலைப் போக்குவரத்துக்கழகம், பஸ் நிலைய திமுக ஆட்டோ சங்கம் உள்ளிட்ட இடங்களில் சங்கத்தின் கொடியேற்றப்பட்டது.
மாநில திமுக அமைப்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன், நிர்வாகிகள் அண்ணா அடைக்கலம், ஃபிராங்ளின் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
அண்ணா தொழிற்சங்கம்: அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் புதுச்சேரி அரசு போக்குவரத்துக்கழகம், திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பகுதிகளில் சங்கக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
பேரவைச் செயலர் ஏ.பாப்புசாமி, நிர்வாகிகள் புருஷோத்தமன், ஆ.பாஸ்கர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
இதே போல், மார்க்சிஸ்ட் கட்சி, சி.ஐ.டி.யு., புதுச்சேரி படைப்பாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பிலும் சங்கங்களின் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக தலைவா்கள் ஆணவத்தில் பேசுகின்றனா்! - வைகோ குற்றச்சாட்டு

மேலூா் அருகே காா் விபத்தில் பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

வைகையாற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

