காரைக்காலில் காவல்துறை அனுமதியின்றி புதன்கிழமை போராட்டம் நடத்த முயன்ற இஸ்லாமிய அமைப்பினருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்கிற அமைப்பு சுதந்திர தின விழா நடத்த தமிழக காவல்துறை அனுமதி மறுத்ததைக் கண்டித்து, காரைக்காலில் கடந்த 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். இதற்கு போலீஸார் அனுமதி மறுத்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 27 பேரை கைது செய்து பல்வேறு பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்தனர்.
இவர்கள் மீது போலீஸார் பொய் வழக்குப் போட்டுள்ளதாக, காவல்துறையை கண்டித்து இந்த அமைப்பினர் மாவட்ட ஆட்சியரகம் அருகே புதன்கிழமை போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தனர். இதற்கும் காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி போராட்டம் நடத்த முன்வரலாமென நினைத்த போலீஸார், குறிப்பிட்ட இடத்தில் ஆயுதம் ஏந்திய போலீஸாரும், ரிசர்வ் பெட்டாலியன் பிரிவினரும் குவிக்கப்பட்டனர்.
மாலை 5.30 மணி அளவில் போராட்டம் நடத்த மாதாகோவில் வீதி வழியே வந்த அந்த அமைப்பைச் சேர்ந்த சுமார் 100 பேரை போலீஸார் வழிமறித்து கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, பாரதியார் சாலையில் திடீரென பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 100 பேர் காவல்துறையை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு வந்தனர். திடீரென கூட்டத்தினர் ஒரு இடத்தில் நின்று காவல்துறையினருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவதாகக் கூறி போலீஸார், அவர்களை கைது செய்து கல்லூரிப் பேருந்து ஒன்றில் ஏற்றினர்.
பேருந்தில் ஏற மறுத்தவர்களை போலீஸார் இழுத்துச் சென்று ஏற்றினர். அப்போது, போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேருந்து புறப்படும் நேரத்தில், உள்ளே இருந்தவர்கள் பேருந்து கண்ணாடிகளை உடைத்தனர். இச்சம்பவத்தில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் என இருவருக்கு கண்ணாடி குத்தி காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்றவர்களை போலீஸார் கலைந்து செல்லும்படி கூறினர். ஏற்க மறுத்து நின்றிருந்தவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
உதகை தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா காங்கிரஸ்?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

