இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

வெடிகுண்டு, அரிவாள்களுடன் 3 ரௌடிகள் கைது

புதுச்சேரியில் பிரபல ரௌடியைக் கொலை செய்வதற்காக வெடிகுண்டு மற்றும் அரிவாள்களுடன் காரில் சுற்றித் திரிந்த 3 ரௌடிகள்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:16 am IST

புதுச்சேரியில் பிரபல ரௌடியைக் கொலை செய்வதற்காக வெடிகுண்டு மற்றும் அரிவாள்களுடன் காரில் சுற்றித் திரிந்த 3 ரௌடிகள் கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக புதுச்சேரி வடக்கு காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.ராமராஜ் கூறியதாவது:

புதுச்சேரி பெரியகடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவகுமார் தலைமையில், ஏட்டு பியோரஜான், காவலர் சங்கர் ஆகியோர் அண்ணாசாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட முயன்ற போது, அந்தக் கார் வேகமாக பின்புறமாகச் சென்றது. அதிலிருந்து 6 பேர் இறங்கித் தப்பி ஓடினர். அவர்களை போலீஸார் துரத்திச் சென்று 3 பேரைப் பிடித்தனர்.

காரைச் சோதனையிட்டபோது, பக்கெட் ஒன்றில் 3 நாட்டு வெடிகுண்டுகளும், 3 வீச்சரிவாள்களும் இருந்தன.

பிடிபட்ட மூன்று பேர் வாணரப்பட்டைச் சேர்ந்த ராமச்சந்திரன், வேல்ராம்பட்டு பகுதியைச் சேர்ந்த பிரவீண், காட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பிரபல ரௌடியின் கூட்டாளிகள் என்பதும், மற்றொரு ரௌடி வீரய்யனைக் கொலை செய்வதற்காக வெடிகுண்டு மற்றும் அரிவாள்களுடன் சுற்றித் திரிந்ததும் தெரிய வந்தது. மேலும், தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறிக்க திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது.

அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தப்பியோடிய மேலும் மூவரைத் தேடி வருகிறோம் என்றார் அவர்.

துணிச்சலாகச் செயல்பட்டு, ரௌடிகளை விரட்டிப் பிடித்த போலீஸாரை, காவல்துறை கண்காணிப்பாளர் (வடக்கு) ராமராஜ் பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.