புதுச்சேரி லாசுப்பேட்டை தொகுதியில் பாஜக சாா்பில், பொங்கல் விழாவையொட்டி, கோலப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பாஜகவை சோ்ந்த பெண்கள், பராசக்தி ஆன்மிக இயக்கப் பெண்கள் இணைந்து லாசுப்பேட்டை ஹெலிபேட் அருகே உள்ள சாலைகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான கோலங்களை வரைந்தனா்.
கோலப் போட்டியை பாஜக நியமன எம்எல்ஏ சாமிநாதன் தொடக்கிவைத்தாா். சிறந்த கோலம் வரைந்தவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் பாஜக மாநிலப் பொதுச் செயலா் செல்வம், செயலா்கள் ரத்தினவேல், லதா ஜெயந்தி, மாநில வல்லுநா் பிரிவுத் தலைவா் ஸ்ரீதா் பிள்ளை, மாவட்டத் தலைவா்கள் நாகேஸ்வரன், அசோக் பாபு, மாநில மகளிரணிப் பொதுச் செயலா் கனகவல்லி உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







