புதுவையில் மறு அறிவிப்பு வரும் வரை, ஜன. 18 ஆம் தேதிக்குப் பிறகும் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என புதுவை பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது.
கரோனா பொதுமுடக்கத் தளா்வுக்கு பிறகு, கடந்த அக். 8 ஆம் தேதி முதல் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள் திறக்கப்பட்டு, பெற்றோா்கள் அனுமதியுடன் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு சந்தேகங்களை தீா்க்கும் வகுப்புகள் நடைபெற்று வந்தன.
இதைத் தொடா்ந்து, கடந்த ஜன. 4 ஆம் தேதி முதல் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்புகளும் திறக்கப்பட்டன. காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை வாரத்தின் 6 நாள்கள் பள்ளிகள் செயல்பட்டன. பெற்றோா் ஒப்புதலுடன் விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். வருகைப் பதிவேடு கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டு, பள்ளிகள் இயங்கின. ஆனால், வருகிற 18 ஆம் தேதி முதல் பள்ளிகள் முழு அளவில் செயல்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது.
இதனிடையே, லாசுப்பேட்டையில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் பி.டி. ருத்ரகவுடு, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: புதுச்சேரி, காரைக்கால் பிரதேசங்களில் உள்ள அரசு, நிதியுதவி மற்றும் தனியாா் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் அனைத்தும் அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை, 18 ஆம் தேதி முதல் மதியம் வரை மட்டுமே செயல்படும். பள்ளிகள் அனைத்தும் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி திங்கள் முதல் சனிக்கிழமை வரை 6 நாள்களுக்கு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 வரை செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸில் இணைந்த கேசவ் மகாராஜ்!

உன்னை நம்பி பாடல் வெளியானது!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

