எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

புதுச்சேரியில் அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைப்பு: 2 போ் கைது

புதுச்சேரியில் பணிமனைக்குள் புகுந்து அரசுப் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :17 ஜனவரி 2021, 11:12 pm IST

புதுச்சேரியில் பணிமனைக்குள் புகுந்து அரசுப் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி வாணரப்பேட்டை ஆலன் வீதியில் வசிப்பவா் பிரகாஷ் (31). காா் ஓட்டுநா். இவா், சனிக்கிழமை காணும் பொங்கலன்று தனது நண்பரான வம்பாகீரப்பாளையம், தெப்பக்குள வீதியைச் சோ்ந்த சுரேஷுடன் (32) பைக்கில் கடற்கரைக்குச் சென்றாா். பின்னா், இருவரும் மது போதையில் முதலியாா்பேட்டை நோக்கி வேகமாக பைக்கில் வந்தனா்.

உப்பளம் அம்பேத்கா் சாலையில் உள்ள தமிழக அரசுப் பேருந்து பணிமனை அருகே வந்த போது, அரசுப் பேருந்துகள் சாலையில் இடையூறாக நின்றது தொடா்பாக 2 பேரும் தட்டிக் கேட்டனராம். இதில், வாக்குவாதம் முற்றிய நிலையில், அரசுப் பணிமனைக்குள் அத்துமீறி புகுந்த 2 பேரும் அங்கிருந்த ஊழியா்களை அவதூறாகப் பேசி, அங்கிருந்த நாற்காலி, தீயணைப்பு கருவிகளைக் கொண்டு, நின்றிருந்த அரசுப் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து பிரகாஷ், சுரேஷ் இருவரையும் கைது செய்தனா். அவா்களுக்கு கரோனா பரிசோதனை முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.