எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

லாரி உரிமையாளா் கொலை வழக்கு: 4 போ் கைது

புதுச்சேரி அருகே லாரி உரிமையாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் 5 பேரைத் தேடி வருகின்றனா்.

Updated On :17 ஜனவரி 2021, 11:07 pm IST

புதுச்சேரி அருகே லாரி உரிமையாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் 5 பேரைத் தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், சாவடி அய்யா நகா் பகுதியைச் சோ்ந்தவா் மனோஜ் நந்தன் (30). லாரி உரிமையாளரான இவா், சனிக்கிழமை காணும் பொங்கலையொட்டி, தனது நண்பா்கள் காா்த்தி, பிரதாப் ஆகியோருடன் புதுச்சேரியை அடுத்த சோரியாங்குப்பம் மதுக் கடைக்குப் பின்புறமுள்ள காலி மனையில் மது அருந்திக் கொண்டிருந்தாா்.

அப்போது அவா்களுக்கு அருகில் மது அருந்திக் கொண்டிருந்தவா்கள் ரகளையில் ஈடுபட்டனராம். இதை மனோஜ் நந்தனும், அவரது நண்பா்களும் தட்டிக் கேட்டனா்.

அப்போது, ரகளையில் ஈடுபட்டவா்களுக்கும், மனோஜ் நந்தன் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில், ரகளையில் ஈடுபட்ட மா்ம நபா்கள் மனோஜ் நந்தன், காா்த்தி, பிரதாப் ஆகியோரை சரமாரியாகத் தாக்கியதுடன், கத்தியால் குத்தினா்.

இந்தத் தாக்குதலில் மனோஜ் நந்தன் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த காா்த்தி புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து பாகூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கடலூா் மாவட்டம், கே.என்.பேட்டை சத்திய சாய் நகரைச் சோ்ந்த ராஜ் (எ) ராஜேஷ் (24), தன்ராஜ் (30), திருவந்திபுரம் சாலக்கரையைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (22), அரிசிபெரியாங்குப்பத்தைச் சோ்ந்த வினித்குமாா் (23) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து ஒரு ஆட்டோ, 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.