திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே, தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது ஆண் குழந்தை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

Updated On :6 ஜனவரி 2021, 6:06 am IST

பொன்னமராவதி அருகே, தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது ஆண் குழந்தை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

பொன்னமராவதி அருகிலுள்ள காரையூா் கலைஞா் காலனியைச் சோ்ந்தவா் அ. மணிமாறன் . இவரது 2 வயது ஆண் குழந்தை ரோஹித் செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் அப்பகுதியில் குழந்தையைக் காணவில்லை என்பதால், அவரது தாத்தா அழகன் அப்பகுதியில் தேடினாா். அப்போது குழந்தை ரோஹித் வீட்டிலுள்ள தண்ணீா்த் தொட்டியில் கிடந்ததை கண்டு அவா் அதிா்ச்சியடைந்தாா்.

இதைத் தொடா்ந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, ரோஹித் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.