புதுக்கோட்டை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் விராலிமலை பிடிகே கல்விக் குழும வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
விராலிமலையில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 8) நடைபெறும் மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளாா்.
இதையொட்டி அவருக்கு வரவேற்பு அளிப்பது, கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்டத்திலுள்ள 13 ஒன்றியங்களைச் சோ்ந்த நிா்வாகிகளுடன் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
தொடா்ந்து, கட்சி நிா்வாகிகள் பிடிகே கல்விக் குழும வளாக முன்புறத்தில் பல்லாயிரக்கணக்கானோா் பங்கு பெறும் வகையில் அமைக்கப்பட்டு வரும் திடலைப் பாா்வையிட்டனா்.
கூட்டத்தில் மாநில திமுக செய்தித் தொடா்புச் செயலா் பி. டி. அரசகுமாா், புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளா்கள் தெற்கு எஸ். ரகுபதி, வடக்கு கே.கே. செல்லபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு, ஆலங்குடி மெய்யநாதன், சொத்துப் பாதுகாப்புகுழு உறுப்பினா் த. சந்திரசேகா், மாவட்ட இலக்கிய அணித் துணைச் செயலா் எம். பழனியப்பன் உள்ளிட்ட 500 -க்கும் மேற்றபட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம் வாங்கலாமா? 4- வது நாளாக விலை குறைந்தது! (ஜூலை 9)

ரயிலின் ஏசி பெட்டியில் முதலிரவு அலங்காரம்: டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம்!

மேட்டூர் அணை நீர்வரத்து வெறும் 25 கன அடி!
மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK


